வணக்கம்!
இளம் வயது கல்வியை காட்டக்கூடிய அமைப்பு என்றால் அது மூன்றாவது வீடு என்று சொல்லுவார்கள். மூன்றாவது வீடு ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர்களுக்கு இளம் கல்வி அறிவு நன்றாக இருக்கும்.
உண்மையில் மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்து மூன்றாவது வீடு கெட்டவர்கள் என்று சொல்லும் நபர்களும் நன்றாக படித்துவிடுகின்றார்கள். இவர்களும் நல்ல வேலைக்கு சென்று இன்று நல்ல இடத்தில் இருக்கின்றனர்.
இளம் வயதில் படிப்பு கெடுவதற்க்கு காரணமாக இருப்பது மூன்றாவது வீட்டில் இராகு அல்லது கேது இருப்பதால் நடைபெறும். இராகு கேது இருந்து அந்த தசா இளம்வயதில் நடந்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறிச்செல்லும்.
உங்களின் குழந்தைகளுக்கு இந்த மாதிரி அமைப்பு இருந்தால் அவர்கள் படிக்கும்பொழுது கூடுதல் கவனத்தை அவர்களின் மேல் வையுங்கள். கொஞ்சம் முயற்சித்து அவர்களை பாதுகாத்து பள்ளிபடிப்பை நீங்கள் தொடர வைத்தால் அவர்களும் படித்துவிடுவார்கள்.
ஒரு பக்கம் அவர்களுக்கு படிப்பை நல்ல முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இருக்கும் காரணிகளை செய்யவேண்டும் மறுபக்கம் அவர்களுக்கு என்று இருக்கும் பரிகாரத்தை செய்துக்கொண்டு வந்தால் இவர்களின் வாழ்க்கையும் வீணாக போய்விடாது.
ஒரு சில காலக்கட்டத்திற்க்கு முன்பு தான் இந்த தோஷத்திற்க்கு வழி கிடைக்காமல் இருந்தது. தற்பொழுது இந்த தோஷத்திற்க்கு வழி இருக்கின்றது. இதனைப்பற்றி விவரம் தெரியவருகின்றது அல்லவா. விபரம் தெரிந்தாலே அதில் இருந்து மீண்டு வந்துவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment