Followers

Monday, May 6, 2019

மூலாதார சக்தி


வணக்கம்!
          காலையில் தந்த பதிவை படித்துவிட்டு நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். நான் ஆறு வருடமாக யோகா தியானம் செய்கிறேன் எனக்கு இன்று வரை பல தடைகள் இருக்கதான் செய்கின்றது. தினசரி விநாயகரையும் வணங்கி வருகிறேன் என்று சொன்னார். இதற்கு என்ன செய்வது என்று கேட்டார்.

இங்கு இது தான் பெரிய பிரச்சினையாகவே இருக்கின்றது. இதற்கு காரணமாக இருப்பது யோகா நடத்தும் நபர் அல்ல. முறையான வழியில் இதனை கொண்டு செல்லாமல் போவதும் கூட இதற்கு வழி வகுக்கும்.

பெரும்பாலும் உடலில் சக்தி குறைவாக இருந்தாலும் பெரியளவில் பயன் கிடைப்பதில்லை என்று தோன்றுகிறது. இதனைப்பற்றி பழைய பதிவில் கூட சொல்லிருக்கிறேன். உடலுக்குள் நன்றாக வேலை செய்யும் விசயங்களையும் தேடி எடுத்து இதனை செய்யவேண்டும்.

யோகா மற்றும் தியானம் செய்து மூலாதாரம் சரியாக வேலை செய்யவில்லை எனும்பொழுது மூலாதாரத்திற்க்கு நல்ல சக்தியை வெளியில் இருந்து கொடுக்கும் விசயத்தை எடுத்து செய்து பாருங்கள். வெளியில் இருந்து இதனை வேலை செய்து இயக்க வைப்பார்கள்.

ஒரு சில ஆன்மீகவாதிகளை சந்திக்கும்பொழுது நமது உடலில் மாற்றம் வரும் இது எங்கு கிடைக்கின்றது என்பதை பார்த்து அவர்களை சந்தியுங்கள். நல்ல ஆன்ம நிலையில் இருப்பவர்களை சந்தித்தால் உடலில் மூலாதாரம் முதலில் திறந்து ஒவ்வொரு சக்கரங்களாக திறக்கின்றது. இதனை தேடிச்செய்யுங்கள்.

உங்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் திருமணத்தை செய்யுங்கள். பலருக்கு திருமணம் முடிந்த பிறகு தான் நல்ல வாழ்க்கை அமையும். இதுவும் மூலாதாரத்திற்க்கு நல்ல ஒரு விசயமாகவே எடுத்துக்கொள்ளலாம். திருமணம் முடிந்த பிறகும் சரியில்லை என்றால் அதற்க்கும் வழி இருக்கின்றது. தடை ஏற்படுத்தும் காரணத்தை சோதிடம் வழியாகவும் கண்டுபிடிக்கலாம்.

ஜாதகத்தில் தடை ஏற்படுத்தும் கிரகங்கள் என்று இருக்கின்றன. ஒருவரை போட்டு முடக்கி வைக்கும் விசயங்கள் இருக்கின்றன அதனை பார்த்து நாம் சரி செய்துக்கொள்ளவேண்டும். அனைத்து கிரகங்களும் உங்களுக்கு எதிராக செயல்படும் காலங்களில் இப்படிப்பட்ட தடை வருகின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: