வணக்கம்!
மூன்றாவது வீட்டில் நல்லது நடந்து வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர். மூன்றாவது வீடு என்றாலே அது பிரச்சினையை தான் தரும் என்று இல்லை பலருக்கு நல்லதையும் செய்துக்கொண்டு தான் இருக்கும்.
மூன்றாவது வீட்டு அதிபதி நன்றாக அமைந்து மூன்றாவது வீட்டில் அமரும் கிரகம் நல்ல கிரகமாக அமைந்து அந்த தசா வரும் காலங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுக்கும். ஒரு சிலர் தொழில் செய்தால் அந்த தொழில் சிறப்பான ஒரு நிலைக்கு வரும்.
மூன்றாவது வீடு என்பது கமிஷன் தொழிலையும் குறிக்ககூடிய ஒரு இடமாக தான் இருக்கின்றது. மூன்றாவது வீட்டு தசா உங்களுக்கு நடந்தால் நீங்கள் பெரியளவில் முதலீடு போட்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கவேண்டும் என்பதில்லை நீங்களே உங்களின் மொபைல் போனில் இருந்து தொழிலை செய்துவிடலாம்.
சேவை வழியாக தொழில் செய்யும் நபர்களுக்கு எல்லாம் மூன்றாவது வீடு நன்றாக வேலை செய்துக்கொண்டு இருக்கும். இவர்கள் மூளை மட்டும் முதலீடாக வைத்து தொழில் செய்துக்கொண்டு இருப்பார்கள்.
மூன்றாவது வீட்டில் புதன் அமர்ந்தாலும் ஒரு சிலருக்கு நல்லதை தரும். மூன்றாவது வீட்டில் புதன் அமர்ந்து சேவை தொழிலில் கொடிகட்டி பறந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment