Followers

Tuesday, May 7, 2019

மூன்றாவது வீடும் சிந்தனையும்


வணக்கம்!
          சோதிடத்தில் மூன்றாவது வீடு மனதையும் காட்டக்கூடிய ஒரு அமைப்பு என்பதால் அதனைப்பற்றி தான் இந்தளவுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன். ஏன் என்றால் நம்முடைய வாழ்வில் நிறைய மனத்திற்க்காக செய்யவேண்டும் அப்படி செய்தால் நீங்கள் எந்தவித சிக்கலும் இன்றி எளிதாக இலக்கை அடைய முடியும் என்பதற்காக அனைத்து விசயத்தையும் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு நண்பர் நேற்று கேட்டார். நீங்கள் சொல்லுவது உண்மை தான் ஆனால் நாங்கள் முழுமையாக சிந்தித்துக்கொண்டே தான் எங்களுடைய வேலையை செய்யமுடியும் என்றார். அவர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். புதிய புதியதாக சிந்தித்தால் மட்டுமே எங்களால் பணிபுரியமுடியும் சிந்திக்காமல் இருந்தால் எங்களால் வேலையை செய்யமுடியாது என்றார்.

உங்களின் வேலையில் இருக்கும்பொழுது நீங்கள் சிந்திக்கவேண்டும். வேலையை முடித்தவுடன் ஒய்வாக இருக்கவேண்டும். ஒய்வாக இருக்கும் நேரத்தில் சிந்தித்துக்கொண்டே இருந்தால் உங்களுக்கு சிக்கல் தான் வரும் என்றேன்.

வேலைக்கு செல்பவர்களுக்கு இப்படிப்பட்ட சிந்தனை தேவையான ஒன்று தான் அப்பொழுது தான் உங்களுக்கு வேலையில் நல்ல உயர்வு கிடைக்கும். தேவையற்ற விசயத்தில் மனதைப்போட்டுக்கொண்டு குழப்பிக்கொண்டு இருக்கும்பொழுது உங்களுக்கு  சிக்கல் வந்துவிடும்.

எனக்கும் நிறைய வேலைகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. உங்களின்  வேலையை விட மிகவும் மோசமான வேலையாக தான் எனது வேலையும் இருக்கின்றது. இதனை நான் செய்யும்பொழுது அப்படி நினைப்பதில்லை அதனால் எளிதில் வெளியில் வந்துவிடுகிறேன். ஒய்வு நேரத்தில் அதிகமாக சிந்திப்பது கிடையாது.

பல பேர் இன்றைய தேதியில் நடப்பதைப்பற்றி சிந்திப்பதில்லை கடந்த காலத்தில் நடந்ததைப்பற்றி சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது எதிர்காலத்தைப்பற்றி சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள். நல்ல சிந்தனையாக இருந்தால் பரவாயில்லை அனைத்தும் வீணான சிந்தனையாக இருந்தால் பிரச்சினை உங்களுக்கு தான் வரும். உங்களின் மனது தான் பாழ் ஆகும். உங்களால் முடிந்தவரை தேவையானவற்றை மட்டும் சிந்தித்துக்கொள்ளுங்கள்.

புதிய சிந்தனை செய்யும்பொழுது புதிய விடியல் பிறக்கும் என்று சிந்தனை செய்யலாம் ஆனால் அமைதியான மனது சிந்திக்கும்பொழுது பல வருடம் சிந்தித்த ஒரு காரியத்தை மிக எளிமையாக சிந்தனை செய்து சாதித்துவிடும். குழம்பிய மனதிற்க்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: