வணக்கம்
நம்முடைய ஜாதகம் மோசமான ஒரு ஜாதகமாக இருக்கும்பட்சத்தில் அதனை சரி செய்ய நாம் பரிகாரம் மற்றும் வழிபாடுகளை செய்தாலும் அதனோடு நாம் கொஞ்சம் நன்றாக யோசித்து அதற்கு தகுந்த ஏற்பாட்டை செய்து ஒரு வழிகளை செய்துக்கொள்ளலாம். இளைஞர்களாக இருந்தால் இதற்கு மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ளலாம்.
நீங்கள் திருமணம் செய்யும்பொழுது உங்களுக்கு வரும் துணையின் ஜாதகத்தை நன்றாக தேர்வு செய்து உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளலாம். துணையின் ஜாதகம் நன்றாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அவர்களின் வழியாகவே அமைந்துவிடும்.
இளைஞர்களாக இருந்தால் இளம்வயதிலேயே நீங்கள் தேர்வு செய்யவேண்டும். ஒரு நல்ல ஜாதகம் அமைவதற்க்கு நிறைய போராட்டம் செய்து அதன்பிறகு உங்களுக்கு அமையும். காதல் மணம் புரிந்தால் உங்களுக்கு இருக்கும் கிரகத்தோடு அதிகபட்சம் உங்களுக்கு கெட்ட கிரகமாக தான் வரும் ஒன்றும் செய்யமுடியாது.
நம்முடைய ஜாதகம் சரியில்லை எனும்பொழுது சேரும் ஜாதகமும் அப்படியே தானே அமையும் எப்படி நல்ல ஜாதகம் அமையும் என்று கேட்கலாம். மனிதன் போராடினால் அதற்கு தகுந்த மாதிரி ஏதோ முன்ஜென்ம புண்ணியப்படி நல்லது நடப்பதற்க்கு வாய்ப்பு இருக்கும்.
திருமணம் செய்யும்பொழுது ஏதோ திருமணம் செய்தால் போதும் என்று இருக்காமல் நீங்கள் நல்ல ஜாதகத்தை தேர்ந்தெடுக்க முயற்சி செய்தால் உங்களுக்கு நல்ல ஜாதகம் அமைவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். திருமணம் செய்யும்பொழுது உங்களின் முயற்சியை அதிகமாக போடுங்கள். நன்றாக உங்களுக்கு வாழ்க்கை அமையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment