வணக்கம்!
மூன்றாவது வீடும் ஒரு மறைமுகவீடு. பொதுவாக மறைமுகமாக வீடுகளுக்கு உள்ள குணம் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை பிடுங்கிவிடும் தன்மையில் வேலை செய்யும். உதாரணத்திற்க்கு பணத்தை கூட வைத்துக்கொள்ளலாம் எதிர்பாராமல் ஏதோ ஒரு செலவை ஏற்படுத்திக்கொடுக்கும்.
மறைமுகவீடுகள் என்றால் உங்களை தூண்டி தூண்டி வேலை செய்வதாகவே வைத்திருக்கும். உங்களை இயக்கிக்கொண்டு இருக்கும் வீடுகளாகவே இந்த வீடுகள் இருக்கின்றன. மூன்றாவது வீட்டில் உள்ள காரத்துவத்திற்க்காக உங்களின் காசு செலவு வைக்கப்படும்.
நமக்கு மூன்றாவது வீட்டிற்க்காக செலவு செய்ய நேரிட்டால் அதனால் வரும் பெரிய பாதிப்பை குறைத்துக்கொள்ளமுடியும். படிப்பிற்க்கு செலவு செய்தால் உங்களின் மூன்றாவது வீட்டிற்க்கு நீங்கள் பரிகாரம் செய்வது போலவே இருக்கும்.
நான் இதற்கு எல்லாம் செலவு செய்யமாட்டேன் என்று ஒரு நிலையில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நாம் தப்பித்துக்கொண்டால் சிறப்பு ஆனால் திடீர் என்று வரும் பெரிய இழப்பை நீங்கள் தாங்கிக்கொண்டு இருக்கவேண்டியதாகிவிடும்.
உங்களிடம் எதுவுமே இல்லை என்றாலும் எப்பொழுது உங்களிடம் வருகின்றதோ அப்பொழுது அதற்கு என்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட செலவை செய்துவிட்டால் அந்த காரத்துவத்தின் கெடுதல் பலனை குறைத்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment