வணக்கம்!
பெரும்பாலும் நான் பார்த்தவரையிலும் குரு கிரகம் சனியின் வீடான மகரம் மற்றும் கும்பத்தில் இருந்தால் பலன் அதிகம் தருவதில்லை. குரு கிரகம் மகரத்தில் நீசம் என்றாலும் கும்பத்தில் அமர்ந்தாலும் கூட அது பலனை அதிகமாக கொடுப்பதில்லை.
குரு கிரகம் அமர்ந்த இடத்தில் இருந்து பார்க்கும் வீடு சுபிட்ஷம் பெறும் என்பது சோதிடவிதியாக இருந்தாலும் மகரம் கும்பத்தில் இருந்து பார்க்கும்பொழுது பார்க்கும் வீடு அந்தளவுக்கு சுபிட்ஷம் பெறுவதில்லை என்பது போன்றே இருக்கின்றது.
குருவோடு சேரும் தீயகிரகம் குருவின் தன்மையும் கெடுகின்றது. ஏதோ ஒரு தீயகிரகம் குருவோடு சேர்ந்து அமர்ந்து இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். குருவோடு அமர்ந்த வீட்டையும் கெடுத்து குரு பார்க்கும் வீட்டையும் கெடுத்துவிடுகின்றது.
உங்களின் ஜாதகத்தில் இப்படி அமர்ந்து இருந்தால் குரு கிரகத்தை விட்டுவிட்டு அசுரகுருவான சுக்கிரன் எப்படி அமர்ந்து இருக்கின்றது என்பதை பாருங்கள். சுக்கிரன் நன்றாக அமர்ந்து இருந்தால் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.
குருவும் கெட்டு சுக்கிரனும் கெட்டால் உங்களுக்கு நடக்கும் தசாநாதன் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் நீங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் இதனைப்பற்றி எல்லாம் கண்டுக்கொள்ளவில்லை என்றால் உங்களின் வாழ்க்கை பெரும்பாலும் வீணாக தான் சென்றுக்கொண்டு இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Dhanusu Lagnam, Lagnathypathy Guru Ucham in 8th House... Ithu Yepdi Sir Work Agum... Same Thulam Lagnam, Sukran Ucham at 6th House.... pl Clarify..
Post a Comment