வணக்கம்!
மறைமுகவீடுகள் பலம் பெறக்கூடாது என்று சொல்லுவார்கள். மூன்றாவது வீடும் ஒரு மறைமுகவீடு. மறைமுகவீடு பலம்பெறும்பொழுது அந்த நபர் சாதாரணமான நபராக இல்லாமல் கொஞ்சம் அதிகமான வேகத்தோடு இருப்பார்.
சமுதாயம் எப்படி ஒருவரை விரும்புகின்றது என்றால் ஒரு மனிதர் அவரால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று விரும்பும். அமைதியான நபர் எந்தவித சண்டை சச்சரவுக்கும் செல்லமாட்டார் என்று சொல்லுவார்கள்.
மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் அந்த வீடு பலம் பெறும் அந்த நபர் சாதாரமானவராக இருக்கமாட்டார். பிரச்சினை மேல் பிரச்சினையை கொடுப்பவராகவே இருப்பார். இந்த காலத்தில் எல்லோரும் அமைதியாக தான் காணப்படுகின்றனர் இந்த அமைதி என்பது வில்லங்கமாக வந்துவிடுகின்றது.
ஒருத்தன் அமைதியாக இருந்தால் அவர் பெரிய வில்லங்கத்தை செய்துக்கொண்டு இருக்கின்றார் என்று அர்த்தம் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றது. உங்களின் ஊரில் ஒருவர் அமைதியாக இருந்தால் அவர் தான் தற்பொழுது பெரிய வில்லங்க வேலையை செய்துக்கொண்டு இருப்பார் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
மூன்றாவது வீடும் பலம்பெறும்பொழுது அந்த நபரால் ஏதோ ஒரு பிரச்சினை அவரின் குடும்பத்திற்க்கு அல்லது அவரை சார்ந்த சமுதாயத்திற்க்கு ஒரு பிரச்சினையை கண்டிப்பாக தோற்றுவிப்பார் என்பதை சொல்லுகிறேன். இதனை அறிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல செயல்பட்டால் நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment