வணக்கம்!
மூச்சு சுவாசத்தை குறிக்கும் வீடும் மூன்றாவது வீடு தான் இந்த மூன்றாவது வீட்டில் இருக்கும் தீயகிரகம் ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு உங்களுக்கு பெரிய பிரச்சினையை கொடுக்ககூடிய ஒரு வகையில் செயல்படும்.
உங்களின் மூச்சு காற்று உடலுக்கு ஒழுங்காக செல்லாமல் கொஞ்சம் இடைவெளிவிட்டு உள்ளே வாங்குவது போல செய்யும். பலர் இதனை மூச்சு வாங்குகிறது என்பது போலவும் சொல்லுவார்கள். மூச்சுகாற்று உள்ளே சென்று மறுமுறை வெளியில் வந்து மூச்சை வாங்குவதற்க்கு ஒரு சில இடைவெளி வருகின்றது.
பகலில் இது தெரியாமல் இருந்தால் கூட இரவில் இது நடக்கும் இதனை நன்கு கவனித்து பார்த்தால் உங்களுக்கு தெரியவரும். மூன்றாவது வீட்டில் உள்ள தீயகிரகம் மூச்சுகுழாய் வழியாக காற்றை இழுப்பதற்க்கு தடை செய்யும் என்று கூட சொல்லலாம்.
ஒரு சிலருக்கு மூச்சு காற்று வேகமாக இழுத்து இழுத்து அடிப்பது போல கூட செயல்படுகின்றது. இது அனைத்திற்க்கும் காரணம் மூன்றாவது வீட்டில் உள்ள கிரகம் தான் பாதிப்பை தருகின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.
உங்களுக்கு இப்படி நடந்தால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை பார்ப்பது கூட ஒரு சோதிடரிடமும் ஆலோசனை பெறுவது நல்லது. இதற்கு பரிகாரமும் அவசியம் மருத்துவமும் அவசியமாக இருக்கின்றது. இது சரி செய்யக்கூடிய ஒரு அமைப்பு என்று சொல்லிவிடுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment