Followers

Friday, May 10, 2019

பிரச்சினைகள் தீர எளிய வழி


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் நமக்கு வரும் பிரச்சினையை சமாளிக்க ஒரு வழி இருந்தால் சொல்லுங்கள் என்று ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார். இதற்கு ஒன்று நம்மை ஒரு சக்தி வாய்ந்த மனிதர்களாக மாற்றிக்கொள்வது தான் சிறந்த வழி என்று சொன்னேன்.

நமது ஆத்மாவிற்க்கு நல்ல சக்தி இருந்தால் நம்மை நோக்கி பெரும்பாலும் பிரச்சினை வராது. பிரச்சினை வந்தாலும் அதனை எளிதாக சமாளித்து முன்னேற்றம் காண்பார்கள். நமது ஆத்மாவில் சக்தி இல்லை என்றால் ஊரில் உள்ள அனைத்து பிரச்சினையும் நம்மை நோக்கி வந்துவிடும்.

முதலில் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையறையில் சிறிது நேரம் பூஜை செய்யுங்கள் அதன்பிறகு உங்களின் வேலையை பார்க்க தொடங்குங்கள். அன்றைய நாள் முழுவதும் பெரும்பாலும் இது வேலை செய்யும். மாலை வீட்டிற்க்கு வந்தவுடன் பூஜையறையில் விளக்கை ஏற்றி சாமி கும்பிட்டு அதன்பிறகு வீட்டில் இருங்கள்.

உங்களின் வீட்டிற்க்கு அருகில் ஏதாவது கோவிலில் யாகம் நடந்தால் அந்த யாகத்தில் சிறிது நேரமாவது சென்று கலந்துக்கொள்ளுங்கள். எந்த கோவிலாக இருந்தாலும் பரவாயில்லை எந்த மாதிரியான யாகமாக இருந்தாலும் பரவாயில்லை கலந்துக்கொள்ளுங்கள்.

ஒரு யாகத்தில் சிறிது நேரம் பங்குக்கொண்டாலே உங்களின் ஆத்மாவிற்க்கு தேவையான சக்தி கிடைக்கும். தியானம் யோகம் எல்லாம் தினமும் செய்வதற்க்கு கடினமாக இருந்தாலும் மேலே சொன்ன விசயத்தை நீங்கள் பின்பற்றி வந்தாலே உங்களின் பிரச்சினையை எளிதில் நீங்கள் தீர்த்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: