Followers

Monday, May 9, 2016

அனுபவம்


ணக்கம்!
         இன்று இருந்து தினமும் மூன்று பதிவாது தந்துவிடவேண்டும் என்று நினைத்து இருந்தேன். அம்மன் பூஜைக்கு ஏற்பாடு செய்துக்கொண்டு இருந்த காரணத்தால் அது நடக்காமல் போய்விட்டது. அம்மன் பூஜை முடிந்தவுடன் உங்களுக்கு நிறைய பதிவுகளை தந்துவிடுகிறேன்.

சோதிடப்பதிவுகள் தரும்பொழுது அதில் சொல்லப்பட்ட கருத்தை உங்களின் சுயஜாதகத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். அந்த தகவல் சரியாக இருந்தால் அதற்குரிய பரிகாரத்தை உங்களின் சோதிடர்களிடம் சென்று கூட செய்துக்கொள்ளுங்கள். செய்யாமல் இருக்கவேண்டாம் என்று சொல்லுவேன்.

உங்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் இந்த கிரகங்கள் தான் தீர்மானிக்கின்றன என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். நமக்கு வரக்கூடிய ஒவ்வொரு பிரச்சினையும் கிரகங்கள் துணையின்றி வருவதில்லை என்று தெரிந்தால் கண்டிப்பாக நீங்கள் புத்திசாலி. பல பேர்களுக்கு நான் சோதிடம் பார்த்து இருக்கிறேன். பல பேர்களுக்கு சோதிடத்தின் பலனை மட்டும் தான் கேட்கவேண்டும் என்று இருக்கின்றது அதற்கு வழியை தேட அனுமதிப்பதில்லை.

சோதிடத்தில் உள்ள சூட்சமமும் அது தான் என்ன என்றால் பலனை மட்டும் பார்த்துவிட்டு வழி தெரியாமல் செல்லவேண்டும் என்று இருக்கும். நம்ம ஆட்கள் அனைவரும் இப்படி தான் இருக்கின்றனர். அதனால் படித்துவிட்டு உங்களின் ஜாதகத்தை பரிசோதனை செய்துவிட்டு என்ன வழி என்பதை பார்ப்பதில் இருக்கின்றது நமது திறமை.

ஒரு சில ஜாதகங்களில் வழி இருக்கும் பல ஜாதகங்களில் வழி இல்லாமல் இருக்கும். அதனை எல்லாம் நன்றாக தெரிந்துக்கொள்ளவேண்டும்.ஒரு நல்ல எண்ணம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுதும் கிரகங்கள் வேலை செய்கின்றது என்று அர்த்தம். கெட்ட எண்ணம் வேலை செய்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுதும் கிரகங்கள் வேலை செய்கின்றன என்று அர்த்தம்.

இதனை இரண்டையும் நீங்கள் கண்காணிக்கும் ஒரு நிலையும் இருக்கும் அப்பொழுது நீங்கள் கடவுள் துணையோடு உங்களை கவனிக்கின்றீர்கள் என்று அர்த்தம். அது பார்க்க நம் நினைத்தால் நமது முன்னோர்கள் மற்றும் நாம் செய்த புண்ணியம் நமக்கு கைகொடுக்கிறது என்று அர்த்தம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: