வணக்கம்!
நமது ஜாதககதம்பத்தின் சார்பாக வரும் 17.05.2016 செவ்வாய்கிழமை அன்று சுவாமிமலை சுவாமிநாதசுவாமி ஆலயத்தில் தங்கரத புறப்பாடு நடைபெறும். அனைவரும் நேரில் கலந்துக்கொள்ள தங்களை பணிவோடு அழைக்கிறேன்.
நேரில் வரமுடியாதவர்கள் அன்று மாலை 8 மணியளவில் முருகபெருமானை மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். தங்களின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகத்தின் பாதிப்பால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். சுவாமிமலை முருகன் உங்களுக்கு அருளை வழங்கி நல்ல வாழ்க்கையை கொடுக்கும்.
பல நண்பர்கள் தங்களின் கோரிக்கை மெயிலை எனக்கு அனுப்பி இருந்தனர். அனுப்பாத நண்பர்களுக்கும் உடனே உங்களின் ஜாதகத்தை பார்த்து உங்களின் பிரச்சினை மற்றும் கோரிக்கையை எனக்கு அனுப்பலாம்.
அறுபடை வீட்டிலேயே அதிக சக்தி படைத்த முருகனின் கோவிலில் நாம் தங்கரதம் இழுக்கிறோம். ஏதோ வெறும் வேண்டுதல் இல்லாமல் தங்களின் நியாயமான வேண்டுதலை வைக்கும்பொழுது கண்டிப்பாக அதனை நமக்கு நிறைவேற்றி முருகன் கொடுப்பார். உங்களின் கோரிக்கை மற்றும் வேண்டுதலுக்கு என்று எந்த வித கட்டணமும் தரவேண்டியதில்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment