வணக்கம்!
சுக்கிரன் காரத்துவம் உடைய ஆள்களை நான் பார்த்தோம் என்றால் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் அதிக பிரியம் உடையவர்களாக இருப்பார்ககள். சுக்கிரனின் காரத்துவம் அதிகம் இருந்தாலே அழகாக தான் இருப்பார்கள். அழகாக இருந்தாலும் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் அதிக பிரியம் இருக்கும்.
ஒரு சிலர் அழகாக இருக்கமாட்டார்கள் ஆனால் சுக்கிரனின் தசா வந்தால் தன்னை அழகரிக்க தொடங்கிவிடுவார்கள். பல பேர்களை நீங்களே பார்த்து இருக்கலாம். உடல் முழுவதும் பவுடரை பூசிக்கொண்டு இருப்பார்கள். உடல் முழுவதும் என்பது ஒரு கேலியாக சொன்னேன். பவுடரை அப்படியே முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
பவுடர் பூசிக்கொள்ளாவிட்டாலும் அதிகளவில் நறுமணம் வரக்கூடிய வாசனை திரவியத்தை உடல் முழுவதும் பூசிக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இன்றைக்கு எல்லாரும் தன்னை அலங்காரம் செய்துக்கொண்டாலும் இவர்கள் அதிகளவில் அலங்காரம் செய்துக்கொள்பவர்களாக இருப்பார்கள்.
நீங்களே இதனை தெரிந்துக்கொள்ளமுடியும். ஒரு பத்து பேரை எடுத்துக்கொண்டாலே ஒருத்தர் தன்னை அலங்காரம் செய்வதில் அதிக நாட்டமாக இருப்பார் அவர்களின் ஜாதகத்தை வாங்கி பார்த்தால் சுக்கிரன் அவர்களுக்கு பலமாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment