Followers

Wednesday, May 25, 2016

புதனும் நட்சத்திரமும்


வணக்கம்!
         ஒருவருக்கு நுண்ணறிவை காட்டக்கூடிய கிரகம் எது என்றால் புதன் கிரகம். புதன் கிரகம் எந்த கிரகத்தோடு சேருகின்றதோ அந்த கிரகத்தின் தன்மையை அப்படியே கொடுக்ககூடிய ஒரு கிரகம். புதன் தனித்து அமைந்தால் புதன் எந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றதோ அந்த நட்சத்திரத்தின் தன்மையை அப்படியே கொடுக்கும்.

ஒருவருக்கு புதன் கிரகம் அவிட்டம் நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அவர் பேசினாலே சண்டை சச்சரவு தான் ஏற்படும். அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் இப்படிப்பட்ட தன்மையை கொடுக்கும்.

புதன் கிரகம் அனுஷத்தில் சென்றால் அனுஷம் சனிக்கிரகத்தின் நட்சத்திரம் என்பதால் சனியின் தன்மையை கொடுக்கும். ஏதாவது வில்லங்கத்தை செய்துக்கொண்டே இருப்பார்.

பெரும்பாலும் பலருக்கு புதன் கிரகம் ஏதாவது ஒரு கிரகம் குறிப்பிட்டு சொன்னால் சூரியனோடு சென்றுக்கொண்டிருக்கும் தனித்து நிற்பவர்கள் மட்டும் நட்சத்திரத்தை பார்க்கலாம்.

புதன் தனித்து நின்று உங்களின் ஜாதகத்தில் இருந்தால் எந்த நட்சத்திரத்தில் செல்லுகின்றது என்பதை மட்டும் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். அந்த நட்சத்திர அதிபதியின் காரத்துவத்தை அப்படியே காட்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: