வணக்கம்!
ஜாதகத்தை வைத்து தீர்வை சொல்லவந்தோம் இடையில் அப்படியே நட்சத்திரத்தையும் பார்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இனி ஜாதகத்திற்க்கு தீர்வை பார்க்கலாம்
சூரியன் என்பவர் ஆத்மாகாரகன் என்று அழைக்கப்படுகிறார். உங்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதியும் ஆத்மாகாரகன் என்று அழைத்தாலும் சூரியன் நன்றாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மா நன்றாக இருக்கும்.
லக்கினாதிபதியாக இருக்கட்டும் சூரியனாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் நன்றாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும்.
இன்றைய காலத்தில் ஞாயிற்றுகிழமை என்றாலே அவர் அவர்களுக்கு தூங்கும் ஒரு தினமாகவே வைத்திருக்கிறார்கள். எப்படியே இருந்துவிட்டு போகட்டும்.
சூரியன் நன்றாக இருப்பதற்க்கு என்ன செய்யவேண்டும் என்றால் தினமும் அதிகாலையில் எழுந்தால் போதுமானது. வேறு தனியாக பரிகாரம் செய்யவேண்டாம். காலையில் எழுந்துவிட்டால் உங்களுக்கு அனைத்தும் தானாக நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment