Followers

Monday, May 23, 2016

ஜாதக தீர்வு :: சந்திரன்


வணக்கம்!
          சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். நட்சத்திர அதிபதியின் குணத்தை அப்படியே சந்திரன் கொடுக்கும். 

உதாரணமாக சந்திரன் பூசம் நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருந்தால் சனியின் குணத்தை அப்படியே கொடுக்கும். சனியின் குணத்தை உடையவராக இருப்பார்.

நட்சத்திர அதிபதியை நாம் தெரிந்துக்கொண்டு என்ன செய்ய போகிறோம் என்று கேட்கலாம். சனியின் குணத்தை உடையவராக ஒருவர் இருந்தால் அது கொஞ்சம் கடினமான ஒரு விசயமாக இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது நட்சத்திர அதிபதிக்கு பரிகாரம் செய்யலாம்.

நட்சத்திர அதிபதிக்கு பரிகாரம் செய்யும்பொழுது அவரின் கெடுதல் குணம் குறைந்து ஒரளவு நல்ல குணத்தை அளிக்கும். நமக்கு வரும் தீமையை குறைக்கும் ஒரு வழி என்பதால் இதனை சொல்லுகிறேன்.

ஒவ்வொறு நட்சத்திரத்திற்க்கும் தனிதனி குணம் இருக்கும் அதனை எல்லாம் தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் பரிகாரத்தை செய்தால் ஒரளவு ஜாதகருக்கு நிம்மதியை ஏற்படுத்தி தரமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Sandhiran saara parivardhanai adaindhal enna seyya?