வணக்கம்!
நம்முடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு இதுவரை நாம் எப்படி வாழ்க்கை பயணம் செய்துக்கொண்டிருக்கிறோம் இனிமேல் எப்படி பயணம் அமையபோகின்றது என்பதை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். இதனை தெரிந்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதுமா இனிமேல் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் கொஞ்சம் யோசித்தால் அதன்படி மாற்றிக்கொள்ளமுடியும்.
ஜாதகத்தில் தான் வாழ்க்கை பயணத்தின் சூட்சமும் இருக்கின்றது. ஜாதகத்தை எடுத்துக்கொண்டு எப்படி போகின்றது என்பதை மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள் அதன் பிறகு ஒரு சில விசயங்களை நான் பதிவில் சொல்லுகிறேன்.
முழுமையான ஒரு தீர்வாக அது இருக்கும் என்று நீங்கள் நம்பலாம் அதே நேரத்தில் அதனை நீங்கள் செய்து வந்தால் உங்களின் வாழ்க்கை உடனே மாறாது படிப்படியாக உங்களின் வாழ்க்கை நிச்சயம் மாறும்.
இது ஒரு நல்ல ஆரம்பமாக உங்களுக்கு இருக்கும். முடிந்தவரை முதலில் உங்களின் ஜாதகத்தை தூசி தட்டி எடுத்து எப்படி கிரகங்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன என்பதை மட்டும் பார்த்து வையுங்கள் பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment