வணக்கம்!
செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மற்றும் இதுவரை நிலம், வீடு அமையாதவர்களுக்கு என்று ஒரு பொதுவாக ஒரு பரிகாரம் செய்யலாம் என்று ஒரு திட்டம் இருந்தது. ஏற்கனவே அம்மனுக்கு இதன் சம்பந்தமாக ஒரு பூஜை நடத்தப்பட்டது. மேலும் இதனை ஒரு அறுபடை வீட்டில் வைத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன்.
இன்று மாலை ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசனம் செய்துவிட்டு நண்பர் கண்டியூர் இராமசுப்பிரமணியனிடம் ஆலோசனை செய்துவிட்டு சுவாமிமலையில் பூஜை செய்துவிட்டு அப்படியே தங்கரதம் இழுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
நமது ஜாதககதம்பம் வழியாக ஏற்கனவே இது போல் ஒரு தங்கரதம் இழுத்துள்ளோம். அதனைப்பற்றி உங்களுக்கும் தெரியும் மேலும் இதனை செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்ட காரணத்தாலும் பல நண்பர்களின் வேண்டுகோளால் இது மறுபடியும் நடைபெற இருக்கின்றது.
நாளை எப்படியும் தேதி முடிவு ஆகிவிடும். உங்களின் ஜாதகத்தில் செவ்வாய் எப்படி இருக்கின்றது என்பதை மட்டும் எடுத்து பாருங்கள். செவ்வாய் கிரகம் எனக்கு பிரச்சினை கொடுக்கிறது என்று நீங்கள் நினைத்தால் எனக்கு ஒரு மெயில் செய்யுங்கள். உங்களின் பெயர் உங்களின் ஜாதகத்தில் செவ்வாயால் என்ன பிரச்சினை ஏற்படுகிறது மற்றும் ஏதாவது முருகனிடம் வேண்டுதல் இருந்தால் அனுப்பிவைக்கலாம்.
சுவாமிமலையில் உங்களின் செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாய் கிரகத்தால் வரும் பிரச்சினைக்கு அங்கு நான் சங்கல்பம் வைத்துவிடுகிறேன். முருகன் உங்களுக்கு அருளை வழங்குவான்.
உங்களின் தகவல்கள் மற்றும் வேண்டுதல்கள் ரகசியமாக இருக்கும் கவலை வேண்டாம். இது அனைத்தும் இலவச சேவை எந்த வித கட்டணமும் இல்லை. நமது ஜாதககதம்பத்தின் வழியாக வந்த பணத்தில் இது செய்யப்படுகிறது.
எண்ணற்ற நண்பர்கள் ஜாதககதம்பத்தில் இருக்கின்றார்கள். நம்முடைய வேண்டுதலை எப்படி இவர் எடுத்துக்கொள்வார் என்று அனுப்பாமல் இருந்துவிடாதீர்கள். அனைத்தையும் படித்துவிட்டு உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.
அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி : astrorajeshsubbu@gmail.com
அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி : astrorajeshsubbu@gmail.com
செவ்வாய் சம்பந்தப்பட்ட காரத்துவம் உடைய வேண்டுதல்களை மட்டும் அனுப்புங்கள். நியாயமான கோரிக்கையாக அது இருக்கவேண்டும். விரைவில் உங்களுக்கு எந்த தேதி என்பதை அளிக்கிறேன். உடனே எனக்கு உங்களின் கோரிக்கையை அனுப்பிவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment