வணக்கம்!
இன்று ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்றால் அதற்கு கண்டிப்பாக அவர்கள் கிடையாது. அவர்களின் முன்னாேர்கள் செய்த வினை இப்படி வந்துவிடுகிறது அதனால் பல பேர் கஷ்டப்படுகின்றனர்.
இன்றைக்கு என்னை தேடி பல இளைஞர்கள் வருகின்றார்கள். உண்மையில் அவர்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினைக்கு அவர்கள் காரணம் இல்லை என்பது மட்டும் உண்மை. நமது முன்னோர்கள் அதாவது நமது பரம்பரையில் உள்ளவர்கள் செய்த தீவினையால் வந்த பிரச்சினை இது.
இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் ஒரளவு நல்லமுறையில் வளர்ந்து வளர்க்கிறார்கள் அதாவது எந்த வித பிரச்சினையும் செய்யாமல் ஒழுங்காக இருக்கின்றனர். நமது முன்னோர்கள் செய்த பிரச்சினை பல பேருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாமல் இருக்கின்றது.
இந்த மாதிரியானவர்கள் செய்யவேண்டியது முதலில் உங்களின் முன்னோர்கள் காட்டும் பாவமான ஒன்பதாவது வீடு எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள். அந்த அதிபதிக்கு என்ன செய்யவேண்டும் என்பதை பாருங்கள்.
உங்களுக்கு செய்யதெரியவில்லை என்றால் குரு கிரகம் காட்டும் விசயங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். உடனே பலன் வரவில்லை என்றாலும் கொஞ்ச நாளில் வந்துவிடும்.
பல பேருக்கு முன்னோர்களைப்பற்றி எந்த வித விபரமும் தெரியாமல் இருக்கின்றார்கள். தாத்தாவின் அப்பா பெயர் தெரியாமல் இருக்கின்றனர் இதனை எல்லாம் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். இது தெரிந்தால் தான் அதற்கு நாம் பரிகாரம் செய்யமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment