வணக்கம்!
எப்படியாவது வாழவேண்டும் என்ற துடிப்பு இருக்கும் நபர்கள் எதையாவது தேடி அலைந்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வார்கள். சோம்பேறிகள் எப்படியாவது போனால் போகட்டும் என்று உட்கார்ந்துக்கொண்டு இருப்பார்கள்.
இன்றைக்கு ஜாதககதம்பத்தை எல்லாம் படிக்கும் நண்பர்கள் எப்படியாவது வாழவேண்டும் என்ற துடிப்பு இருக்கும் நண்பர்கள் தான் என்பது தெரியும். நம்மை மீறி ஏதோ ஒரு சக்தி நம்மை தடுக்கிறது அதனை தடை செய்யாமல் முன்னேறிவிடவேண்டும் என்ற நினைப்போடு வழியை தேடி தான் இங்கு வந்து இருக்கின்றீர்கள்.
தேடிபார்த்த விடை காணவேண்டும் என்று துடிப்பவர்களுக்கு சந்திரன் ஒரளவு நன்றாக வேலை செய்துக்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம். வீட்டில் சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சந்திரன் வேை செய்யவில்லை அதாவது அவர்களை போட்டு தாக்கிக்கொண்டு இருக்கின்றது என்ற அர்த்தம்.
சந்திரன் நன்றாக இருந்தால் மனநிலையும் சரியாக இருந்து இப்படி தேடுதல் அதிகமாக இருக்கும். சந்திரன் நன்றாக இல்லை என்றால் தேடுதல் இருக்காது.
நீங்கள் எப்படி இருந்தாலும் சரி உங்களை இந்த நிலைக்கு தள்ளியது வேறு யாரும் கிடையாது உங்களின் மனம் என்பதை மட்டும் ஏற்றக்கொள்ளவேண்டும். பிறரை நாம் குறைச்சொல்லி ஒன்றும் செய்யமுடியாது. நமது மனதை நாம் சரி செய்ய சந்திரனை சரி செய்யவேண்டும். கண்டிப்பாக ஒரு மேம்படுத்திய வாழ்க்கையை நாம் வாழலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment