வணக்கம்!
நம்ம ஊரில் ஒரு கதை சொல்லுவார்கள். சந்திரன் சாட்சி சொன்னது என்ற கதை தான் அது. கணவன் மனைவி இருவர் வாழ்ந்து வந்துள்ளார்கள். மனைவிக்கு தம்பி ஒருவர் இருந்து இருக்கிறார். மச்சானுக்கும் மச்சானுக்கும் ஏதோ தகராறு நடந்து இருக்கிறது. அக்கா வீட்டுக்காரர் கடுமையான கோபக்காரராக இருந்து இருக்கிறார்.
ஒரு இரவு மச்சானை அழைத்துக்கொண்டு இரவில் வெளியே சென்றவர் அவர் மட்டும் வீடு திரும்பி இருக்கிறார். அக்கா எங்கு தம்பி என்று கேட்டதற்க்கு அவன் அவனின் ஊர் சென்றுவிட்டார் என்று சொல்லிருக்கிறார்.
நடந்து என்ன என்றால் இரவில் அழைத்துக்கொண்டு சென்றவர் வயல் வெளியில் வைத்து மச்சானை கொன்றுவிட்டார். அவர் மச்சானை கொல்லும்பொழுது பெளர்ணமி இரவு. சந்திரனை பார்த்து நீ தான் சாட்சி என்று இறந்து இருக்கிறான்.
நீண்ட வருடம் சென்ற பிறகு கணவன் மனைவி இருவரும் ஒரு நாள் பெளர்ணமி இரவில் வாசலில் அமர்ந்து இருந்திருக்கிறார்கள். அப்பொழுது கணவன் நிலவை பார்த்துக்கொண்டே நிலவு சாட்சி சொல்லும் என்றான் எங்கே சாட்சி சொன்னது என்று அவனை அறியாமல் வாயிலிருந்து சொல்லிருக்கிறான். மனைவி சந்தேகப்பட்டுவிட்டால் உடனே காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்து விசாரித்தால் கணவன் தம்பியை கொன்றது தெரியவந்தது.
கிராமத்தில் உள்ளவர்கள் கோடை காலத்தில் வாசலில் அமர்ந்து நிலவை பார்த்துக்கொண்டு இந்த கதையை சொல்லுவார்கள். இது கதை இல்லை உண்மையாக நடந்த ஒன்றும் என்றும் சொல்லுவார்கள்.
பல பேருக்கு சந்திரன் என்ற கிரகம் சாட்சியாக இருந்து பல முன் ஜென்மத்தில் நடந்ததை சோதிடர்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கும். உங்களின் ஜாதகத்தையும் எடுத்து பாருங்கள் சந்திரன் சாட்சியாக இருந்து சொல்லுவான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment