வணக்கம்!
ஒவ்வொரு காரியமும் வெற்றியை நோக்கி செல்லுகின்றது என்றால் அது நாம் செய்யும் தர்ம புண்ணிய காரியங்களால் தான் நடைபெறுகிறது.
நம்மிடம் சோதிடம் பார்த்து அவர்களுக்கு ஏதாவது பரிகாரம் செய்வது என்றாலும் முதலில் தர்மம் செய்துவிட்டு அதன் பிறகு பரிகாரம் செய்வது உண்டு. அதற்கு காரணம் அப்பொழுது தான் அவர்களுக்கு காரியம் வெற்றி பெறும்.
ஒரு பரிகாரம் என்பது யார் செய்தாலும் அது வேலை செய்யும் ஆனால் நமது தர்ம புண்ணிய கணக்கை பொறுத்து தான் அது எப்பொழுது வெற்றி பெறுகிறது என்பதை முடிவு செய்யமுடியும்.
எனக்கு தெரிந்த ஒருவர் எப்பொழுதும் ஏதாவது கோவிலில் ஏதாவது ஒரு நிகழ்வை செய்துக்கொண்டே இருப்பார். அப்பொழுது எல்லாம் எனக்கு அந்தளவுக்கு ஆன்மீக அனுபவம் கிடையாது அவரை தற்பொழுது பார்த்தால் மிக உயர்ந்த ஒரு இடத்தில் இருக்கிறார். இதற்கு எல்லாம் காரணம் அவர் செய்த அந்த ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வு தான் காரணமாக இருக்கின்றது.
சோதிடத்தில் கூட சொல்லிருப்பது ஒரு காரியம் வெற்றி பெறவேண்டும் என்றால் உன்னுடைய பாக்கியம் என்று சொல்லி ஒன்பதாவது வீட்டை காண்பித்து இருக்கிறார்கள். பாக்கியஸ்தானம் சொல்லும் கருத்தும் தர்ம புண்ணியம் தானே தவிர வேறு ஏதும் இல்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment