Followers

Thursday, May 26, 2016

குருவின் அருள்


ணக்கம்!
         தற்பொழுது பல பேருக்கு குரு தசா நடக்கிறது ஆனால் குரு தசாவிற்க்கு உண்டான எந்த ஒரு நல்ல செயலும் எனக்கு நடக்கவில்லை என்று சொல்லுவார்கள்.அதற்கு காரணம் தசாநாதன் மட்டும் கிடையாது அவர்களின் முன்னோர்களும் சரியாக செய்யவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

முன்னோர்கள் என்பவர்கள் நமது தந்தை நமது தந்தைக்கு தந்தை இப்படி செல்லும் தொடரால் நாம் பாதிப்படைந்துக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஏதாவது ஒரு நல்லது செய்து இருந்தால் நமக்கு நடக்கும் குரு தசா வாரி வழங்கிக்கொண்டு இருக்கும்.

முன்னோர்களை நாம் குறைச்சொல்லி ஒன்றும் தற்பொழுது நடக்க போவதில்லை. அதற்கு வழி என்ன என்று பார்க்கவேண்டும். அது என்ன வழி என்றால் முன்னோர்கள் செய்த தவறுக்கும் நாம் தற்பொழுது பிராசித்தியம் தேடினால் கிடைத்துவிடும்.

பாக்கியஸ்தானம் சொல்லும் வழியில் நீங்கள் நடக்க ஆரம்பித்தால் உங்களின் வாழ்வு மேம்பட ஆரம்பிக்கும். பல பேருக்கு நான் இதனை தான் சொல்லுவேன். பலர் நன்றாக இருக்கின்றனர்.

இதனை கேட்காத நபர்கள் தற்பொழுதும் சிக்கலில் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். அவர் அவர்களுக்கு முடிந்ததை செய்து வெளியில் வந்துவிடுங்கள். குருவின் அருளால் நன்றாக வாழலாம்.

கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: