வணக்கம்!
புதன் கிரகம் ஒருவருக்கு ஏதாே பிரச்சினை தருவதுபோல் இருந்தால் அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். தோல் நிறம் மாறும். தேமல் அல்லது ஏதாே ஒரு சருமபிரச்சினை வந்துவிடும்.
ஒரு சிலருக்கு புதனின் தசாவில் அதிகளவில் இப்படிப்பட்ட பிரச்சினை வருவது உண்டு. அதுவும் லக்கினத்தில் அல்லது லக்கினாதிபதியோடு சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் இது நடக்ககூடிய வாய்ப்பு இருக்கின்றது.
ஒரு சிலருக்கு மாமனார் வழியாக பிரச்சினை ஏற்படும் அவர்களுக்கு எல்லாம் புதன்கிரகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்தால் வரும். மாமனார் சொத்து கிடைப்பதாக இருந்தால் அப்பொழுது புதன் கிரகம் உங்களுக்கு வலுவாக இருக்கின்றது என்று அர்த்தம்.
புதன் கிரகம் இரட்டை தன்மை உள்ள கிரகம் என்பதால் அதிகளவில் நடப்பது எல்லாம் இரண்டு ஆப்ஷன் கொடுத்து தான் வரும். ஏதோ ஒன்றை வாங்க செல்வோம் நமக்கு இரண்டு வாங்கும் நிலையை ஏற்படுத்திவிடுவார்.
புதன் கிரகம் எதனோடு சேருகின்றதோ அதன் தன்மையை தரும்கிரகம் என்பதால் உங்களின் ஜாதகத்தில் எப்படி இருக்கின்றது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment