Followers

Sunday, May 22, 2016

ஜாதக தீர்வு : நேரம்


ணக்கம்!
          நமக்கு ஏதோ ஒரு பிரச்சினை வருகின்றது என்றால் பிரச்சினை வந்ததை பார்ப்பதை விட இந்த பிரச்சினை எதனால் வருகின்றது என்பதை பார்க்கவேண்டும். பிரச்சினை என்றால் எந்த கிரகத்தால் வருகின்றது என்பதை முதலில் பார்க்கவேண்டும்.

பொதுவாக உள்ள மனிதனாக இருந்தால் என்ன செய்வான் என்றால் ஒருத்தன் சண்டைக்கு வந்தால் அவனோடு மல்லு கட்டிக்கொண்டு இருப்பான். நீங்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்றால் எந்த கிரகத்தால் வருகின்றது என்பதை தான் பார்க்கவேண்டும்.

நமக்கு வரும் பிரச்சினை எல்லாமே கிரகங்கள் வழியாக தான் வரும். நமக்கு நல்லது வந்தாலும் சரி தீயது வந்தாலும் சரி அனைத்தும் கிரகங்களால் தான் வரும். நாம் அதனை தெரிந்துவைத்துக்கொண்டாலே போதும் நாம் பிறர் மீது பழிபோட்டுக்கொண்டு இருப்பதை விட நாமே அதனை சரி செய்துக்கொள்ளமுடியும்.

தீர்வு

ஓரை என்ற ஒன்று இருக்கின்றது. உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் அந்த நேரத்தை மனதில் இருத்திக்கொண்டு காலண்டரை எடுத்து அந்த கிழமையில் அந்த நேரத்தில் எந்த ஓரை என்று பார்த்தாலே போதும் இந்த கிரகத்தால் பிரச்சினை வந்தது என்று தெரிந்துக்கொள்ளமுடியும். 

ஓரையிலும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் ஜாதகத்தை எடுத்து தான் பார்க்கவேண்டும். அந்த கிரகம் உங்களுக்கு பிரச்சினை தருகின்றது என்பது புரிந்துவிடும். அந்த கிரகத்தின் நேரத்தில் சும்மா இருந்துவிடலாம் அல்லது ஏதாவது பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: