Followers

Sunday, May 8, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகு சந்திரன் கூட்டணியைப்பற்றி பார்த்து வருகிறோம். ராகு சந்திரன் கூட்டணி போட்டு அமர்ந்தால் பெரும்பாலும் அமாவாசை அல்லது பெளர்ணமி அன்று மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். 

அமாவாசை மற்றும் பெளர்ணமி அன்று மனதில் புயலை கிளப்பிவிடும். அந்த காலத்தில் இந்த நாளை எல்லாம் ஆன்மீகத்திற்க்கு பயன்படுத்தியுள்ளார்கள் என்றால் அது கண்டிப்பாக நிறைய அர்த்தம் இருக்கும்.

அமாவாசை மற்றும் பெளர்ணமி அன்று சாதாரண மனிதர்களுக்கே பல பிரச்சினை ஏற்படும். மனதில் பல விசயங்கள் நடைபெறும். இதில் ராகு சந்திரன் கூட்டணி போட்டு அமர்ந்தால் சொல்லவே வேண்டியதில்லை.

ராகு பல விசங்களை கிளப்பிவிடும் அதோடு தற்கொலை செய்துக்கொள்ளும் ஒரு எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும். பல தற்கொலை நடைபெறுவதற்க்கு ராகு மிக மிக முக்கியப்பங்கு வகிக்கிறார். ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களுக்கு இப்படி அமைந்து எந்த பிரச்சினை இல்லை என்றாலும் அதற்கும் வழிபாடு அல்லது பரிகாரத்தை மேற்க்கொள்ளுங்கள். 

கூடுமானவரை நிறைய பிரச்சினைகள் வரகூடிய வேலைகளில் இருந்து ஒதுங்கி இருக்க கற்றுக்கொள்ளுங்கள். கொஞ்சம் தியானத்திலும் ஈடுபடுங்கள். இறைவழிபாடு உங்களை காக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: