வணக்கம்!
ஒவ்வொருவரையும் செவ்வாய்கிரகத்தின் பாதிப்பிற்க்கு மெயிலை அனுப்ப சொன்னவுடன் தான் பாதிபேர் ஏற்கனவே என்னை தொடர்புக்கொண்டு சோதிடம்பார்த்த நண்பர்கள் இருந்தனர். இவர்கள் சொன்ன விசயம் எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளமுடிந்தது.
பொதுவாக பழைய நண்பர்களுக்கு நான் அதிகம் பரிகாரம் பரிந்துரைப்பதில்லை. தற்பொழுது வரும் நண்பர்களுக்கு அவர்களால் முடிந்தால் பரிகாரம் பரிந்துரைப்பதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொருவரும் தங்களின் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு சொல்லப்படுவது உண்டு.
ஒரு சிலருக்கு மட்டும் நான் பரிகாரம் செய்கிறேன் என்று ஏற்றுக்கொண்டு செய்துக்கொடுத்து இருக்கிறேன். அதுவும் தற்பொழுது மட்டுமே செய்துக்கொடுக்கிறேன். இன்றைய நிலையிலும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் விருப்பபட்டால் மட்டுமே இதனை செய்வது உண்டு.
சோதிடப்பலனை சொல்லுவது உண்டு நீங்களே பரிகாரம் செய்துக்கொள்ளும் படி தான் அதிகப்பட்சம் பரிகாரம் இருக்கும் அதே நேரத்தில் ஒரு சிலருக்கு சோதிடர்கள் பரிகாரம் செய்தால் மட்டுமே நடக்கும். அதற்கு மட்டும் இதனை செய்யலாமா என்று கேட்பது உண்டு. அவர்கள் சொன்னால் நடத்திக்கொடுப்போம் இல்லை என்றால் எதுவும் கண்டுக்கொள்வதில்லை.
இனிவரும் நண்பர்கள் பயம்கொள்ளாமல் வழிபாடு வேண்டும் என்றால் வழிபாடு மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொள்ளுங்கள். பரிகாரம் செய்து தரவேண்டும் என்று கேட்டால் உங்களின் பொருளாதார நிலைக்கு தகுந்தவாறு செய்துக்கொடுக்கப்படும்.
எதுவாக இருந்தாலும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். அதே நேரத்தில் உங்களின் வாழ்க்கை எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை போனில் அல்லது மெயிலில் எனக்கு தெரிவித்துவிடுங்கள்.
எதுவாக இருந்தாலும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். அதே நேரத்தில் உங்களின் வாழ்க்கை எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை போனில் அல்லது மெயிலில் எனக்கு தெரிவித்துவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment