Followers

Monday, May 2, 2016

தசாவும் சந்திரனும்


ணக்கம்!
          சந்திரன் என்ற கிரகத்தை வைத்து தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டு இருக்கின்றது என்பதை பல பேர்களின் ஜாதகத்தை பார்த்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம். தினசரி ராசிபலனை வைத்து எல்லாேருக்கும் நல்லது அல்லது கெட்டது நடந்தால் அப்ப சந்திரன்தானே இயங்கிக்கொண்டு இருக்கின்றது அர்த்தம். உண்மை அதுவல்ல.

நாம் அரைகுறையாக இருப்பதற்க்கே சந்திரன் நமக்கு கொடுக்கும் பலன் தான். தசாநாதன் நன்றாக வேலை செய்தால் நல்ல புத்தி கிடைத்து எடுத்த தொழிலில் வெற்றி மகுடத்தோடு இருப்பான். தசாநாதன் வேலை செய்யாமல் சந்திரன் மட்டும் வேலை செய்து அரைகுறையான பலனை கொடுத்து நாமும் அரைகுறையாக இருக்கிறோம்.

ஒரு தசாநாதன் தன்னுடைய வேலையை செய்யும்பொழுது அவன் ஒரு ராஜாவாக போல வாழமுடியும். அப்படி தசாநாதன் வேலை செய்யவில்லை என்றால் சந்திரனை பார்த்து தான் இருக்கவேண்டும். வாழ்க்கையும் அரைகுறையாக தான் இருக்கும்.

தசாநாதனிலும் சந்திரன் தசா வந்தால் இன்னமும் பிரச்சினை அதிகமாக தான் இருக்கும். பொதுவாக சந்திரன் தசா அனைவருக்கும் நல்லதை வழங்கவதில்லை. நிறைய குளறுபடிகளை சந்திக்கவேண்டும். 

உங்களுக்கு சந்திரன் தசா நடந்தால் கூட நீங்கள் ஜாதகத்தை எடுத்து சந்திரன் நன்றாக வேலை செய்கிறதா அல்லது சந்திரன் பிரச்சினையில் மாட்டியுள்ளதா என்று கவனித்து அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: