வணக்கம்!
ராகு சந்திரனோடு சேர்ந்த என்ன பலன் என்று அவ்வப்பொழுது பார்த்துக்கொண்டு வருகிறோம். இன்று ஒன்றைப்பற்றி பார்க்கலாம். ராகுவோடு சேரும் சந்திரன் மனநிலை பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஒரு சிலருக்கு இதனால் நல்ல பலனை கொடுத்து இருக்கிறது.
ராகு செவ்வாய் வீட்டில் அல்லது சனியின் வீட்டில் இருக்கும்பொழுது நல்ல தைரியத்தை ஒரு சிலருக்கு கொடுக்கிறது. நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் ஒரு சிலருக்கு தான் இப்படி கொடுக்கிறது. அனைவருக்கும் கிடையாது.
இப்படி தைரியத்தை கொடுக்கும் ஆட்களுக்கு எதிலும் ஈடுபட்டு வென்று வந்துவிடுகிறார்கள். என்ன ஒன்று என்றால் அது தவறான வழியாக கூட இருக்கலாம். எதிலும் ஒரு தில்லாக இருந்து காரியத்தை முடிப்பவர்களை எல்லாம் நீங்கள் பார்த்தால் அவர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் இப்படிப்பட்ட விசயம் இருக்கும்.
உங்களுக்கு இருந்து அடடா நாம இதுவரை இந்த வழியில் எல்லாம் இறங்கவில்லையே என்று இறங்கிவிடவேண்டாம். கிரகங்களாக பார்த்து அதன் வேலையை செய்யவேண்டும். நாமும் அப்படி தான் இறங்கவேண்டும் என்று இறங்கினால் பிரச்சினையில் மாட்டிக்கொள்வீர்கள்.
ஒரு சில நபர்களுக்கு மட்டும் இப்படி இருக்கின்றது. அதனை வைத்து உங்களுக்கு சொல்லுகிறேன். ராகு சந்திரன் நிலையை கவனிக்கும்பொழுது நிறைய சோதிடஅறிவு தேவைப்படும் அப்பொழுது தான் நாம் கணிக்கமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment