வணக்கம் !
ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் அதன் அதிபதியை கொடுத்து இருக்கிறேன்.
1. அஸ்வினி - கேது
2. பரணி - சுக்கிரன்
3. கார்த்திகை - சூரியன்
4. ரோகிணி - சந்திரன்
5. மிருகசீரிஷம் - செவ்வாய்
6. திருவாதிரை - ராகு
7. புனர்பூசம் - குரு
8. பூசம் - சனி
9. ஆயில்யம் - புதன்
10. மகம் - கேது
11. பூரம் - சுக்கிரன்
12. உத்திரம் - சூரியன்
13. அஸ்தம் - சந்திரன்
14. சித்திரை - செவ்வாய்
15. சுவாதி - ராகு
16. விசாகம் - குரு
17. அனுஷம் - சனி
18. கேட்டை - புதன்
19. மூலம் - கேது
20. பூராடம் - சுக்கிரன்
21. உத்திராடம் - சூரியன்
22. திருவோணம் - சந்திரன்
23. அவிட்டம் - செவ்வாய்
24. சதயம் - ராகு
25. பூரட்டாதி - குரு
26. உத்திரட்டாதி - சனி
27. ரேவதி - புதன்
மேலே 27 நட்சத்திர அதிபதி யார் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களின் ஜாதகத்தை எடுத்து எந்தந்த கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை பாருங்கள். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் இதனை வைத்து ஒரு வேலை செய்யலாம் என்பதற்க்காக சொல்லுகிறேன்.
உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்று பார்த்து அதன் அதிபதி யார் என்பதை தெரிந்துக்கொண்டுவிட்டு அதன் பிறகு எப்படி பலனை கொடுக்கிறது என்பதை பார்க்கலாம்.
உதாரணத்திற்க்கு ராகு அல்லது கேதுவை எடுத்துக்கொள்ளுங்கள். இது இரண்டும் ஜாதகத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதே அது எந்த நட்சத்திரத்தில் செல்லுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியின் குணத்தை அப்படியே கொடுக்கும் கிரகங்களாக இருக்கின்றது.
உதாரணத்திற்க்கு ஒன்றை பார்க்கலாம்
பரணி நட்சத்திரத்தில் ராகு செல்லுகின்றது என்று வைத்துக்கொள்வோம். பரணி நட்சத்திர அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் காரத்துவத்தை அப்படியே கொடுக்கும். ராகு சுக்கிரன் போல் செயல்படுவார். மேலே சொன்ன விசயம் உங்களுக்கு தெரிந்து வைத்திருப்பீர்கள் இது எல்லாம் ஒரு விசயமாக என்று கேட்கலாம்.
ராகு அனுஷ நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அனுஷம் சனியின் நட்சத்திரம். ஜாதகருக்கு சனி ஒரு வீட்டில் இருந்து பலனை கொடுத்துக்கொண்டு இருக்கும் அதோடு ராகு சனியின் குணத்தை கொடுத்துக்கொண்டு இருக்கும். ஜாதகருக்கு இரண்டு சனி என்று கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.
ஒரு சனியேவே தாங்கமுடியவில்லை இதில் இரண்டு சனி என்றால் என்ன செய்வது என்று நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள். இந்தளவுக்கு உள்ளுக்குள் சென்று யாரும் பார்ப்பதில்லை. வாழ்வில் பெரிய வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக இதனை தெரிந்துக்கொள்ளவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment