வணக்கம்!
ஒருவருக்கு செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு இருந்தால் அவருக்கு வாழ்வில் பல இறக்கங்களை சந்தித்து ஆகவேண்டும். அதாவது செவ்வாய் தோஷம் இருந்தால் நிறைய கோபம் இருக்கும் அதனால் பல தோல்விகளை சந்திக்கவேண்டும்.
செவ்வாய் கிரகம் தன்னுடைய வேலையை கோபம் வழியாக தான் காட்டும். செவ்வாய் தோஷம் மட்டும் இருந்தால் அல்ல. செவ்வாய் கிரகம் ஒவ்வொருவருக்கும் பல தோல்விகளை கோபம் வழியாக தான் கொடுக்கிறது.
என்னுடைய வாழ்வில் கூட பல தோல்விகளுக்கு காரணமாக இருந்தது கோபம் தான். இதனை எல்லாம் நான் புரிந்துக்கொண்ட பொழுது கோபத்தால் இழந்தது பல என்பது தெரியவந்தது. என்னுடைய ஜாதகத்தில் எனக்கு செவ்வாய் தோஷம் கிடையாது ஆனால் செவ்வாய் அவ்வப்பொழுது இதனை செய்து இருக்கிறது.
உங்களின் ஜாதகத்திலும் இதனை நீங்கள் தெரிந்துக்கொள்ளமுடியும். அதாவது உங்களின் ஜாதகத்தை எடுத்து நீங்கள் எப்பொழுது எல்லாம் கோபப்பட்டீர்கள் என்பதை பார்த்தால் அது செவ்வாய் கிரகத்தின் தயவு இல்லாமல் நடந்து இருக்காது.
நாம் இழந்தது நாம் இனிமேல் திரும்பி பெறமுடியாது ஆனால் இனிமேலும் நமக்கு கிடைப்பதை இந்த செவ்வாய் கிரகத்தால் இழக்கவேண்டாம். நமக்கு கோபம் வரும்பொழுது எல்லாம் இந்த செவ்வாய் கிரகம் தான் நமக்கு இப்படி செய்கிறது என்பதை புரிந்துக்கொண்டு அமைதியாக இருந்துவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment