வணக்கம்!
நேற்று நட்சத்திர பதிவை படித்துவிட்டு நிறைய மெயில்கள் வந்தன. அனைத்தையும் இலவசமாக தரவேண்டும் என்றால் பதிவை எழுத ரீசார்ஸ் கூட என்னால் செய்யமுடியாது. முடிந்தவரை உங்களின் ஜாதகத்தை கட்டணத்தில் அனுப்பி வையுங்கள்.
பல பேர்களின் சந்தேகம் நட்சத்திரம் எப்படி பார்ப்பது என்று கேட்டார்கள். சோதிட பாடம் படிப்பதில் அறிமுகத்தில் இருப்பவர்கள் என்று நினைக்கிறேன். உங்களின் ஜாதகத்தில் இராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டத்திற்க்கு பிறகு வரும் ஏட்டில் கண்டிப்பாக சோதிடர்கள் இதனைப்பற்றி எழுதி வைத்திருப்பார்கள்.
பொதுவாக நட்சத்திரத்தை பார்த்து பலன் சொல்லுவது எல்லாம் நடக்கிறதா என்பது தெரியவில்லை. ஒவ்வொரு சோதிடர்களும் இதனை எல்லாம் ஆராய்ந்து சொன்னால் அவர்களுக்கு டைம் என்பது இருக்காது.
என்னைப்பொறுத்தவரை நட்சத்திரத்தை பார்த்து பலனையும் சொல்லுவேன் அதே நேரத்தில் பரிகாரத்திற்க்கு அதிகம் இதனை வைத்து தான் செய்வேன்.பரிகாரம் செய்யும்பொழுது நட்சத்திர கால் அறிந்து செய்யவேண்டும் அப்பொழுது தான் முழுமையான பயனை பெறலாம் என்பதால் இப்படி செய்வது உண்டு.
நட்சத்திரத்தை நன்றாக கவனிக்க தொடங்கினால் உங்களின் பலன் எப்படியும் மாறாது. அதாவது துல்லியமான பலனை உங்களால் கணிக்கமுடியும். அதனால் நட்சத்திரம் என்பது முக்கியமாக நீங்கள் கவனிக்கவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment