வணக்கம்!
ஒருவருக்கு ஒரு தசா நடந்தால் அந்த தசா எப்படி நடந்தாலும் அது முடியும்பொழுது ஒரு சில மாற்றங்களை கொடுத்துவிட்டு போகும். நாம் நினைத்துக்கொண்டு இருப்பாேம் இதுவரை நம்மைபோட்டு கொல்லாமல் கொன்றுக்கொண்டிருந்த இந்த தசா போய்விட்டது புதிய தசா நமக்கு ஒரு வருடத்திற்க்கு முன்பே பலனை கொடுத்துவிட்டது என்று நினைப்போம்.
இதுவரை போட்டு கொன்ற தசா போனால் போகட்டும் என்று கொடுப்பது தான் அது. புதிய தசா ஆரம்பிக்கும்பொழுது நமக்கு இந்த புதிய தசாவில் பல மாற்றங்கள் நடக்கும். பணத்தை கொடுத்தால் தான் அனைத்து காரியமும் நடக்க ஆரம்பித்துவிடுமே.
கொன்ற தசா கொடுத்துவிட்டு போயிருக்கிறது. புதிய தசா உங்களின் கனவை எல்லாம் நனவாக்கிக்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம். ஒருத்தருக்கு ராகு தசாவில் பல பிரச்சினையை சந்தித்து வந்திருக்கிறார் என்றால் ராகு முடியும்பொழுது ஒரு சில விசயத்தை கொடுக்கிறது. அது குரு தசா முழுமையும் நன்மையை தருகிறது.
ராகு தசாவில் கம்யூட்டர் முன்னடி உட்கார்ந்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்தால் அவர் குரு தசாவில் கணிணி படிப்பால் சம்பாதித்துக்கொண்டிருப்பார். எந்த வித கஷ்டமும் இல்லாம் சம்பாதித்துக்கொண்டிருப்பார் இது தான் சூட்சமும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment