Followers

Friday, May 20, 2016

ஜாதக தீர்வு : சந்திரன்

ணக்கம்!
          ஜாதக தீர்வு என்பது அடிக்கடி நமது ஜாதக கதம்பத்தில் கொடுக்ககூடிய ஒன்று தான் அதில் கொஞ்சம் அதிகமான விசயத்தை தற்பொழுது பார்க்கலாம். ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் செயல்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் எப்படி இருக்கின்றது என்பதை முதலில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் மனைவியோடு வீட்டில் சண்டைபோட்டுக்கொண்டு அதன் பிறகு அலுவலகத்திற்க்கு சென்றால் உங்களின் மனநிலை உங்களை அலுவலக வேலை பார்க்க விடுமா ?

உங்களை கண்டிப்பாக அந்த மனநிலை விடாது. நீங்கள் கோவிலுக்கு செல்லுகின்றீர்கள் கோவிலுக்குள் இருக்கும் மனநிலை வெளியில் வந்து தெருவில் நடக்கும்பொழுது இருக்காது. சந்திரன் சரியாக இருந்தால் உங்களின் மனநிலை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும். சந்திரன் அடிக்கடி மாறும் கிரக நிலை என்பதால் மனநிலையும் அப்படி மாறுகிறது என்று சொல்லுவார்கள்.

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்றால் உங்களின் மனநிலை சரியாக இருந்தால் போதும் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள். சந்திரனை பிடித்தால் நாம் மனநிலையை சரி செய்துவிடலாம்.

சந்திரனை எப்படி பிடிப்பது. சந்திரனுக்கு என்று பல பரிகார முறைகளை சொல்லிருப்பார்கள் அதில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வந்தால் போதும் கொஞ்ச நாளில் நமது மனநிலை சரியாகி அனைத்தும் சரியாகிவிடும்.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் எப்படி எல்லாம் இருக்கின்றது என்பதைப்பற்றி அலசி ஆராய்ந்து பாருங்கள். உங்களின் மனநிலையைப்பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். அவர் அவர்களின் ஜாதகத்தைப்பொறுத்து தான் இதனை அறியமுடியும்.

இதனை கண்டிபிடுத்தாலே ஒரளவு நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள். அதாவது ஒரு பிடிமானம் கிடைத்துவிடும் இனி இப்படி மாற்றிக்கொள்ளலாம் என்ற தீர்வு உங்களுக்கு கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: