வணக்கம்!
குரு கிரகம் தன்னுடைய பலனை ஒருவருக்கு தருகிறது என்றால் அந்த நபருக்கு பணமாக கொட்டிக்கொடுக்க கொடுத்துக்கொண்டே இருக்கும். அவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அவரை தேடி பணம் வந்துக்கொண்டே இருக்கும்.
ஒரு நபருக்கு பணம் வந்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். லட்சத்தில் ஒருவருக்கு இப்படி பணம் வரும் அப்பொழுது லட்சத்தில் ஒருவருக்கு தான் குரு கிரகம் தன்னுடைய முழுபலனையும் வழங்கிறது என்று அர்த்தம்.
முக்கால்வாசி மக்கள் ஏதோ வாழ்ந்தோம் என்று தான் அதாவது ஏதோ பணம் வந்தால் போதும் என்று தான் இருப்பார்கள். ஒரு சிலர் மட்டும் தான் பணம் நிறைய வேண்டும் என்று வெறியோடு இருப்பார்கள். இப்படி வெறியோடு இருப்பவர்களுக்கு உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள்.
உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருந்தால் உங்களின் வெறி நியாயமான ஒன்று தான் கண்டிப்பாக உங்களுக்கு அந்த பணம் கிடைத்துவிடும். குரு கிரகம் நன்றாக இல்லை என்றால் உங்களை வேண்டும் என்றே வெறி பிடிக்க வைத்து அலையவிடுகிறது என்று அர்த்தம்.
வெறிபிடித்து அலைய விட்டாலும் அதனை நாம் ஆன்மீகபக்கம் கொஞ்சம் சென்றால் அதனை நமக்கு சாதகமாக ஆக்கமுடியும். பாக்கியஸ்தானம் என்ற ஒன்றைப்பற்றி நிறைய பதிவுகளை எழுதியிருப்பேன் அதனை படித்துவிட்டு அது போல் நடந்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக நீங்கள் பெரும் கோடிஸ்வராக மாறிவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment