வணக்கம்!
இராகுவைபற்றி நாம் நிறைய சொல்லிருக்கிறோம். நிறைய சொல்லவும் போகிறோம் இதற்கு எல்லாம் என்ன காரணம் என்று நினைக்க தோன்றும். நினைக்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை என்னுடைய மனது நினைக்கிறது அதனால் எழுதுகிறேன்.
இன்றைய வாழும் மக்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்று பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும். ஒவ்வொருவரும் முடிந்தளவு வில்லங்கம் செய்கின்றனர். இப்படிப்பட்ட வில்லங்கம் எண்ணம் எல்லாம் ஒருவருக்கு வருகின்றது என்றால் ராகுவின் காரத்துவம் இல்லாமல் வருமா ?
ராகு குணங்கள் அதிகரிப்பதால் தான் இப்படிப்பட்ட விசயத்தில் கவனத்தை அதிகம் செலுத்தி எழுதுகிறேன். அதே நேரத்தில் நம்ம ஆட்களுக்கு பணம் என்றால் அதிக விருப்பம் என்பதால் ராகுவின் குணம் சும்மா கொட்டு கொட்டும் பணம் என்பதால் அதில் கவனத்தை செலுத்தி எழுதுகிறேன்.
இன்றைக்கு நடக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்க்கும் இராகு தான் அதிக காரணம் வகிக்கிறது. உலகம் இந்தளவுக்கு முன்னேற்றம் காண்கிறது என்றால் அதற்கு ராகு தான் காரணம் என்பதால் ராகுவைப்பற்றி கொஞ்சம் அதிகம் எழுதுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment