வணக்கம் !
நமது அம்மன் பூஜை வரும் 10 ம் தேதிக்குள் நடைபெறும். அம்மன் பூஜைக்கு என்று காணிக்கை அனுப்புவர்கள் தங்களின் காணிக்கையை அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு மாதமும் அம்மனிடம் உங்களின் வேண்டுதல்களை வைக்க சொல்லுகிறேன். ஒரு நண்பர் எப்படி சார் வேண்டுதல் வைப்பது என்று கேட்டார்.
காலையில் எழுந்து குளித்துவிட்டு உங்களின் பூஜையறையில் அமர்ந்து உங்களின் குலதெய்வத்தையும் வணங்கிவிட்டு நமது அம்மனிடம் மனம் உருகி உங்களின் வேண்டுதல் வைக்கலாம். அடுத்த மாதம் அம்மன் பூஜை வருவதற்க்குள் உங்களின் வேண்டுதல்களை அம்மன் நடத்திக்கொடுக்கும்.
ஒவ்வொரு மாதமும் பல நண்பர்கள் அம்மனின் அருளை பெற்று நல்ல வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள். அம்மன் அருள் உங்களுக்கும் கிடைக்க உங்களின் வேண்டுதலை வையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment