Followers

Thursday, May 26, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


ணக்கம்!
          ராகு சந்திரன் கூட்டணியைப்பற்றி சொன்னோம் அல்லவா. அவர் அவர்கள் தன்னுடைய ஜாதகத்தை தூக்கிட்டு வந்து எனக்கு இப்படி இருக்க சார் எனக்கு என்ன செய்யலாம் என்று வந்துட்டார்கள். ஒவ்வொருவருக்கும் பதிலை சொல்லி அனுப்பி இருக்கிறோம்.

ராகு சந்திரன் அதிகப்பட்சமாக ஜாதகத்தில் ஆறாவது இடத்தில் சேர்ந்து இருந்தால் ஜாதகர் பெரும்பாலும் திருட்டு வேலை செய்பவராக இருப்பார்.  ஒரு சிலருக்கு அப்படிப்பட்ட மனநிலை கூட ஏற்படலாம்.

திருட்டு எண்ணம் வருவதும் ஜாதகத்தில் இருப்பதால் தான் வருகிறது. மனக்காரகனோடு ராகு கிரகம் சேரும்பொழுது இப்படிப்பட்ட மனநிலையை உருவாக்கி அவர்களை திருடவைக்கிறது. எல்லாேருக்கும் அப்படி என்று சொல்லமுடியாது .

ராகு சந்திரன் கூட்டணி இருந்தால் நானும் திருட்டு தொழில் தான் செய்யவேண்டுமா என்று நினைக்காதீர்கள். கோடியில் ஒருவருக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும். ஒவ்வொருவரின் ஜாதகமும் வித்தியாசப்படும்.

ஒரு சிலர் பிறர் மனதை கொள்ளை கொள்பவராகவும் இருப்பார்கள். பிறரின் மனதை கூட தன்வசம் ஈர்க்கும் ஒரு சக்தியை உடையவராகவும் இருப்பார்கள். அவர் அவர்களின் ஜாதகம் இதனை முடிவு செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: