வணக்கம்!
ராகு மற்றும் சந்திரன் இணைந்து இருந்தால் எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை பார்த்து வருகிறோம். ராகு சந்திரன் கூட்டணி அமைத்து லக்கினத்தில் அல்லது ஏழாவது வீட்டில் அமைந்தால் உடல் அடிக்கடி சதைபோடும்.
இன்றைக்கு இருக்கும் யுகத்தில் உடல் பருமன் என்பது அதிகளவில் காணப்படுகிறது. அதற்கு காரணம் உணவில் கலப்படம் என்று சொல்லுகின்றார்கள். உணவு மற்றும் நமது வாழ்க்கை சூழலும் அதற்கு காரணமாக அமைகின்றது.
ராகு சந்திரன் இணைந்தால் திடிர் உடல் பருமன் அதிகமாக இருக்கும். கொஞ்ச நாள் சென்று பார்த்தால் உடல் மெலிந்து காணப்படும். அதன் பிறகு அதேப்போல் உடல் பருமன் அதிகமாக இருக்கும்.
ராகு சந்திரன் இணைந்து இருந்தால் நீங்கள் சாப்பிடும் உணவிலும் அதிகம் கவனமாக இருக்கவேண்டும். உடலில் விஷம் காரணமாக உங்களின் உடல் கெட்டுவிடுவதற்க்கும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment