வணக்கம்!
நட்சத்திரத்தைப்பற்றி பார்த்தோம் அல்லவா. ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் அதிபதியைப்பற்றி சொல்லிருந்தேன். சுக்கிரனின் நட்சத்திரம் பரணி பூரம் மற்றும் பூராடம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்கள் பெரும்பாலும் நல்ல பலனை கொடுக்ககூடிய கிரகங்களாக இருக்கும்.
எப்படிப்பட்ட தீயகிரகங்களும் இந்த நட்சத்திரத்தில் செல்லும்பொழுது அதன் தீயபலன்கள் குறைந்து நல்ல பலனை கொடுக்ககூடிய கிரகங்களாக இருக்கின்றன. அனுபவத்தில் நான் பார்த்து இருக்கிறேன்.
ஒரு சிலருக்கு குரு கிரகம் இந்த நட்சத்திரத்தில் செல்லும்பொழுது கொஞ்சம் பிரச்சினையை கொடுக்கிறது. குருவுக்கும் சுக்கிரனுக்கும் ஆகாது என்பதால் இப்படிப்பட்ட பலனை கொடுக்கலாம்.
சுக்கிரனின் காரத்துவத்தைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். சுக்கிரனுக்கு நீங்கள் பரிகாரம் செய்தால் சுக்கிரனின் நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்கள் சுக்கிரனின் காரத்துவத்தை உங்களுக்கு கொடுக்கும்.
பெரிய அளவில் கொடுக்கவில்லை என்றாலும் ஒரளவு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். பரிகாரம் செய்வதில் இருக்கிறது. உங்களின் ஜாதகத்தை நன்றாக பார்த்து அதற்கு தகுந்தார்போல் செய்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment