Followers

Wednesday, May 18, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகு சந்திரன் இணைந்து இருந்தால் எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை அவ்வப்பொழுது பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து எழுதுவாக இருந்தால் பல நண்பர்கள் பயப்படுவார்கள் என்பதால் மாற்றி மாற்றி எழுதி வருகிறேன்.

ராகு சந்திரன் என்ற கூட்டணி வந்தாலே அவர்களின் திருமண வாழ்வு என்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அது என்ன கொஞ்சம் கஷ்டம் என்று கேட்கலாம். ராகு சந்திரன் இணையும்பொழுது திருமணம் செய்யும் துணை மீது அந்தளவுக்கு ஈர்ப்பு என்பது வராது.

இன்றைய காலத்தில் மனைவி மீது எவனுக்கு ஈர்ப்பு வருகின்றது என்று நினைக்கதோன்றும். என்ன தான் இருந்தாலும் இணைந்து கடைசி வரை வாழ்கின்றார்கள் அல்லவா. ராகு சந்திரன் இணையும்பொழுது விரிசல் அதிகமாக இருக்கும்.

விரிசல் என்பது விவாகாரத்து வரை செல்லாது ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். விவாகாரத்து  நடைபெறும் நபர்களுக்கு பிற கிரகங்களில் தாக்கம் அதிகமாக இருக்கும். ராகு சந்திரன் இணைந்து இருந்தால் முடிந்தவரை கணவன் மனைவியோடு சந்தேகம் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: