வணக்கம்!
இராமாயாணம் தொடரை பார்த்து இருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். இதில் சொல்லப்படும் ஒரு செய்தி இராவணன் கிரகங்களை எல்லாம் தன்வசப்படுத்தி கட்டுபோட்டு வைத்திருப்பார். அந்த நேரத்தில் இயற்கை சீற்றம் அதிகமாக நடக்கும். இதனை அறிந்து இராமன் அனுமனை அனுப்பி கிரகங்களை கட்டு அவிழ்த்து விடுவிப்பான். கிரகங்களை வைத்து இராமனுக்கு மரணயோகத்தை உருவாக்க இப்படி இராவணன் சதி செய்வான்.
கிரகங்களை நமக்கு தகுந்தவாறு செய்துவிடமுடியும் என்று அந்த காலத்திலேயே இதனை சொல்லி இருக்கிறார்கள். கிரகங்களை வைத்து செய்யும் வேலை என்பது இது தான். நாம் எதனை செய்தாலும் நமக்கு கிரகங்கள் அனுகூலமாக இருந்தால் நாம் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்.
கிரகங்கள் நமக்கு சாதகமாக இல்லை என்றால் நாம் எளிதில் வெற்றி பெற்றுவிடமுடியாது. சரி நாம் என்ன செய்யலாம் என்று சொல்லுகிறேன். கிரகங்கள் நமக்கு சாதகமாக வரும் காலம் வரை கொஞ்சம் அமைதியாக இருந்துவிடலாம். கிரகங்கள் நமக்கு சாதகமாக இல்லை என்றால் எந்த காரியத்தையும் ஒரு எச்சரிக்கை உணர்வோடு இருக்கவேண்டும்.
கிரகங்களை மாற்றும் வேலை எல்லாம் வேண்டாம் அது சரியான வழிக்கு வரும் வரை காத்து இருக்கலாம். எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் கிரகங்களை பிடித்தால் போதும் கண்டிப்பாக எப்படியும் கொடுத்துவிட்டு போகும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment