Followers

Saturday, April 30, 2016

எமனிடம் இருந்து காப்பாற்றிக்கொள்வது எப்படி?


வணக்கம்!
          நான் எத்தனையோ நல்லது செய்து இருக்கிறேன். அதனை எல்லாம் வெளியில் அந்தளவுக்கு காட்டிக்கொண்டது கிடையாது இருந்தாலும் அவ்வப்பொழுது அதனை சொன்னால் தான் சரிப்பட்டு வரும் எனறு நினைக்கிறேன்.

ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தால் அந்த நபர்க்காக சிறப்பு பிராத்தனை செய்து வந்தேன். சில மாதங்களாக அதனை நிறுத்திவிட்டேன். என்ன காரணம் என்றால் நம்ம ஆட்கள் மருத்துமனையில் இருந்துக்கொண்டு எனக்கு போன் செய்து இப்படி ஒருவர் இருக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என்று கேட்பார்கள்.

நானும் அவர்களுக்காக பிராத்தனை எல்லாம் செய்து இருக்கிறேன். அவர்களும் பிழைத்து இருக்கிறார்கள். பல பேர்களை நான் காப்பாற்றி இருக்கிறேன்.தற்பொழுது அதனை செய்வதில்லை. அதற்கு காரணம் நம்ம ஆட்கள் அதன் பிறகு தொடர்புக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் நன்றாக இருக்கிறார் என்று சொல்லுவதில்லை.

கொஞ்ச நாள் பார்த்தேன் அதன் பிறகு அதனை செய்வதில்லை என்று நிறுத்திவிட்டேன். தேவையில்லாத கர்மாவை நாம் ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும் அதற்கு நமக்கு மரியாதை இல்லை என்று நிறுத்தினேன்.

நேற்று கூட ஒரு நண்பர் அழைத்து சொன்னார். நான் அதனை செய்வதில்லை நீங்கள் சென்று செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். அது என்ன பரிகாரம் என்றால் உக்கிரமாக இருக்கும் காளி தெய்வத்தை வணங்குவது. அதோடு சேர்ந்து எமன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று வணங்கிவருவது மூலம் மரணத்தை தள்ளி போடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: