Followers

Sunday, May 29, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகு சந்திரன் கூட்டணி பலனைப்பற்றி பார்த்து வந்தோம். தொடர்ந்து அதனைப்பற்றி பார்க்கலாம். மனக்காரகன் என்று அழைக்கப்படும் சந்திரனோடு சேரும்பொழுது மனதில் பல பிரச்சினை உருவாகும் அதில் வெறுப்பு என்ற தன்மை அதிகமாக இருக்கும்.

எதனை செய்தாலும் ஏதாவது பிரச்சினை வந்து அதிலேயே வெறுப்பு ஏற்பட்டு நாளடைவில் அதிக வெறுப்பாகி சுற்றும் நிலைமை ஏற்படும். எதுவும் நடக்கவில்லை என்றால் என்ன செய்வது வெறுப்பு தான் அதிகமாக வரும். நிறைவான செல்வம் வந்து கூட ஒரு சிலருக்கு வெறுப்பு ஏற்படும்.

நிறைய பணக்காரர்கள் கூட என்னிடம் கேட்டுள்ளார்கள். என்ன தான் இருந்தாலும் வெறுப்பாக இருக்கின்றது என்று சொல்லிருக்கிறார்கள். அதற்கு காரணம் ராகுவும் சந்திரனும் சேர்ந்து இருந்த காரணத்தால் இப்படி நடக்கிறது.

ராகு கிரகம் ஒரு சிலருக்கு அப்படி தான் வேலை செய்யும் எனக்கு ராகு தசா நடக்கும்பொழுது கூட அப்படி இருந்தது. எதிலும் பிடிப்பு இல்லை பிடிப்பு இல்லை என்றால் எதுவும் என்னிடம் இல்லை. நிரந்தரமாக எதுவும் இல்லாமல் இருந்தது. எனக்கு ராகுவும் சந்திரனும் சேர்ந்து இல்லை ஆனால் ராகு தசா அப்படி ஏற்படுத்தியது.

உங்களுக்கும் இப்படிப்பட்ட நிலை இருந்தால் பெளர்ணமி நாளில் கிரிவலம் சென்று வாருங்கள்.படிப்படியாக உங்களுக்கு இந்த பிரச்சினை குறையும்.

கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Unknown said...

வணக்கம். இந்த பிரச்சனை எனக்கு 100% இருக்கிறது. நிரந்திர தீர்வு கிடைக்குமா.?

Unknown said...

வணக்கம் இதற்க்கு நிரந்திர தீர்வு சொல்ல முடியுமா