Followers

Saturday, May 28, 2016

பச்சைப்பரப்புதல்


வணக்கம்!
          பச்சைப்பரப்புதலைப்பற்றி அவ்வப்பொழுது பார்த்து வருகிறோம். ஒவ்வொரு குலதெய்வத்திற்க்கும் குலதெய்வம் தெரியாத நபர்களுக்கு இஷ்டதெய்வத்திற்க்கும் என்று பச்சைப்பரப்பதலை செய்யுங்கள்.

அமாவாசை அல்லது பெளர்ணமி உங்களின் குலதெய்வத்திற்க்கு உகந்த நாளில் மாலை நேரத்தில் இந்த பூஜையை செய்யவேண்டும். மாவிலக்கு பிசைந்து அதனை உருண்டையாக பிடித்து அதில் தீபம் ஏற்றவேண்டும். நெய் அல்லது எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுங்கள்.

வாழை இலையை போட்டு கொஞ்சம் பச்சை அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு அலசி அதனை பரப்பி தேவையானல் கொஞ்சம் வெல்லத்தை போடலாம். அதன் மேல் மாவிலக்கு உருண்டை வைத்து உங்களின் குலதெய்வத்திற்க்கு உகந்த நேவேத்தியம் செய்து தீபாராதனை காட்டலாம்.

உங்களின் வேண்டுதலையும் வைக்கலாம். கோவிலில் சென்று வழிபடுவதைவிட இது அதிக பலனை உங்களுக்கு கொடுக்கும். தொடர்ந்து செய்து வர உங்களின் வாழ்வு மேம்படும். இதனைப்பற்றி பழைய பதிவில் நிறைய எழுதியிருக்கிறேன். படித்துபாருங்கள்.

கோயம்புத்தூர் ,திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம். விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

Sir
Your contact no pls.
Thanks
A. Ravichandran
9381077353