வணக்கம் நண்பர்களே!
ஒருத்தருக்கு ஜாதகம் பார்த்தால் அவர்களின் விபரத்தைப் பற்றி வெளியில் தெரிவிக்கமாட்டோம். ஒரு குடும்பத்தில் ஒரு நபரின் தகவலைக்கூட அடுத்தவர்க்கு தெரியப்படுத்துவது கிடையாது. கணவன் மனைவியாக கூட இருந்தாலும் தனித்தனியான தகவலை அவர்களுக்கு மட்டும் அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் விருப்பட்டால் மட்டுமே அவரோடு சம்பந்தப்பட்டு நபர்களை ஒன்றாக வைத்து பலனை சொல்லுவேன்.
என்னை சந்திக்கவரும்பொழுதும் நீங்கள் தனியாக வாருங்கள். உங்களின் நண்பர்களை அழைத்துக்கொண்டு வரவேண்டாம். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை எல்லாவற்றையும் பிரதிபலிப்பது ஜாதகம்.அவர்களை அழைத்துக்கொண்டு வரும்பொழுது அனைத்தையும் சொல்லுவதற்க்கு எனக்கு தயக்கமாக இருக்கும்.
ஒரு சிலர் ஜாதகம் என்னிடம் பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். நான் சொல்லுவது அவர்களுக்கு பிடித்து இருக்கும். ஆனால் அடுத்தவர்களுக்கு இதனைப்பற்றி தெரிவிப்பது இல்லை. ஏன் என்றால் நம்மைப்பற்றி சோதிடர் வரும் உறவினர்களிடம் சொல்லிவிடுவார் என்று எண்ணி இப்படி தவிர்க்கிறார்கள். உங்களுக்கு கிடைத்ததை அடுத்தவர்களுக்கும் செல்லவேண்டும் என்று நினைக்கவேண்டும்.
இலவச சோதிடத்தில் வருபவர்களுக்கு ஒன்றைச்சொல்லிக்கொள்கிறேன். எந்த ஒரு காரணமும் கொண்டு பலனை உங்களுக்கு டைப் செய்து அனுப்பமுடியாது. எனக்கு பதிவு எழுதுவதற்க்கே நேரம் இருக்கமாட்டேன்கிறது. கட்டணசோதிடத்திற்கே பலனை நான் டைப் செய்வதில்லை.என்னிடம் டைப் செய்து அனுப்புங்கள் என்று கேட்பதை அன்புடன் தவிர்க்கவும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment