Followers

Friday, December 13, 2013

குரு தசா பலன்கள் பகுதி 18



வணக்கம் நண்பர்களே!
                    ஒருவருக்கு குரு நன்றாக இருந்து தசா நடைபெற்றால் அவரை பல பேர் ஏமாற்றிவிடுவார்கள். இதனை படிக்கும் உங்களுக்கும் நடந்து இருக்கும். குரு கிரகம் போனால் போகட்டும் என்ற மனநிலையில் இருக்க செய்வார். 

பரந்த மனப்பான்மை உடையவராக உஙகளை குரு மாற்றிவிடுவார். அடுத்தவர் எதாவது ஒன்றை உங்களுக்கு செய்தாலும் அதனை பொருட்டுபடுத்தாது நீங்கள் இருந்துக்கொண்டே இருப்பீர்கள். இது அடுத்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு என்று உங்களை ஏமாற்றிவிடுவார்கள். மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டும்.

குரு கெட்டு உங்களுக்கு தசா நடைபெற்றால் அடுத்தவர்களை நீங்கள் ஏமாற்றிவிடுவீர்கள். குரு தசாவில் மூளையின் செயல்பாடு அதிகமாகி அது வில்லங்கமாக சிந்திக்க தோன்றும். புது புது வகையில் பிறரை ஏமாற்றவீர்கள்.

பொதுவாக குரு கிரகம் நன்றாக இருந்தாலும் கெட்டு இருந்தாலும் நீங்கள் நல்லவழியில் செல்வதை வழக்கம் ஆக்கிக்கொள்ளவேண்டும். உங்களுக்கு குரு எப்படி ஒரு நல்லதை செய்வார். என்னிடம் இப்பொழுது அதிகமாக தொடர்பில் இருப்பவர்கள் குரு தசா நடைபெற்று வருபவர்கள் மட்டுமே. அவர்களுக்கு பலவிதத்திலும் நன்மை செய்துக்கொடுத்துக்கொண்டு வருகிறேன்.

குரு தசாவில் தொழில் செய்பவர்களும் நல்ல தொழிலை தேர்ந்தெடுப்பது அவசியம். வில்லங்கமான தொழிலை தேர்ந்தெடுக்ககூடாது. பணம் நேர்மையான வழியில் வருவதுபோல் இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: