வணக்கம் நண்பர்களே!
தொழில் செய்பவர்களுக்கு என்று ஜாதகத்தை வைத்து செய்யவேண்டும் என்று சொல்லிருந்தேன். அதனை படித்ததில் இருந்து நமது நண்பர்கள் அனைவரும் அதனைப்பற்றி தான் கேட்கிறார்கள்.
எனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு செய்து தாருங்கள். முதலிலேயே ஜாதகத்தை எடுங்கள் என்று சொல்லுகிறார்கள். வியாபாரம் என்று வந்தால் அவர்களுக்கு பணம் வாங்காமல் செய்துக்கொடுப்பதே பெரிய விசயம். இந்த காலத்தில் நீங்கள் பிறரிடம் சின்ன பரிகாரம் என்று போனால் கூட உங்களிடம் இருப்பதை எல்லாவற்றையும் கறந்துவிடுவார்கள் ஆனால் நான் இந்த விசயத்தில் பணம் வாங்காமல் செய்துக்கொடுக்கிறேன்.
உங்களிடம் பணம் வாங்காமல் செய்துக்கொடுக்கிறேன் என்றால் நான் வைத்திருக்கும் நம்பிக்கை எப்படிப்பட்டது என்று நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும். அந்த நம்பிக்கையை முதலில் நீங்கள் காப்பாற்றவேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் பல பேரை பெரிய அளவில் உருவாக்கவேண்டும் என்பதற்க்காக தான் உழைத்துக்கொண்டு இருக்கிறேன். இது எனக்கு ஒரு பயிற்சி மாதிரி எனது திறமை மற்றும் அம்மனின் சக்தி எப்படிப்பட்டது என்பதை பார்க்கவேண்டும் என்பது மட்டுமே ஆசை.
அம்மன் எனக்கு பலவிதத்திலும் மிகப்பெரிய உதவியை செய்து தருகிறது. அம்மன் உங்களுக்கு ஒரு வாய்ப்பை தரும் அந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் உண்டு இல்லை என்றால் அது திரும்பிவந்துக்கொண்டே இருக்கும்.
பயன்படுத்துவதும் பயன்படுத்தாமல் இருப்பதும் உங்களின் கையில் தான் உள்ளது என்பதை இந்த நேரத்தில் உங்களிடம் சொல்லுகிறேன். உங்களிடம் மறுமுறையும் சொல்லுவது அம்மனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment