Followers

Monday, December 9, 2013

குரு தசா பலன்கள் பகுதி 16


வணக்கம் நண்பர்களே!
                    குரு லக்கினத்திற்க்கு நாளில் இருந்து தசா நடைபெறும்பொழுது எப்படி பலனை தரும் என்பது இப்பதிவி்ல் பார்க்கலாம்.

குரு நன்றாக இருந்து தசா நடைபெற்றால் 

நல்ல சுகமான வாழ்க்கை அமையும். ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்கும் வீடுகளில் மிகவும் அதிகமான நற்பலன்களை தரும் வீடும் எது என்றால் நான்காவது வீடு என்று சொல்லலாம். அந்த வீட்டில் குரு இருந்து தசா நடைபெறும்பொழுது மிக அற்புதமான பலனை தரும்.

உங்களின் வீட்டை காட்டும் இடம் என்பதால் உங்களின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். புது வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.வீட்டில் சந்தோஷம் இருக்கும்.

குரு நான்காவது வீட்டில் இருந்து ஐந்தாவது பார்வையாக எட்டாவது வீட்டை பார்க்கும் உங்களின் முன்னோர்களின் சொத்து உங்களுக்கு கிடைக்கும். உயில் எழுதி வைத்திருந்தால் உங்களுக்கு அந்த உயில் வரும். 

குரு ஒன்பதாவது பார்வையாக பனிரெண்டாவது வீட்டை பார்ப்பதால் சுபசெலவுக்காக உங்களின் பணம் செலவு செய்வீர்கள். வீட்டில் உள்ளவர் ஒருவருக்கு விழா நடத்துவீர்கள்.

வீட்டிற்க்கு வரும் செய்திகள் அனைத்தும் சுபசெய்திகளாகவே வரும். சுகமான வாழ்க்கைக்கு இந்த தசா உறுதுணை புரியும்.

குரு கெட்டு குரு தசா நடைபெற்றால் இதயத்தை காட்டும் இடத்தில் குரு இருப்பதால் இதயநோய் வருவதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். தகுந்த மருத்துவரிடம் சென்று உடலை பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

நல்ல பலனுக்கு எதிராகவே அதிகமாக நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

நல்வாக்கு சொல்லி உள்ளீர்கள்.
நான்கில் அமரும் போது குருவிற்கு கேந்திராதிபதி
தோஷம் ஏற்பட்டுவிடாதா ? அதோடு அவர் பாதகாதிபதியாக
இருப்பின் தீயபலன்கள் தான் நடைபெறுமா ? thanks !