வணக்கம் நண்பர்களே!
குரு தசாவை பார்த்துக்கொண்டு வருகிறோம். இந்த குரு தசாவை பொருத்தவரை அதிகமாக பிராமணர்கள் போல் செயல்படவைப்பார் என்று பழைய பதிவில் சொல்லிருந்தேன். அதே போன்று எங்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது என்று பல நண்பர்கள் சொல்லிருந்தார்கள். நல்லது.
நமது அனுபவத்தை எழுதினால் மட்டுமே அது அனைவருக்கும் போய் சேரும் என்று நினைத்து எழுதினேன் அவ்வாறு அது போய்சேர்ந்திருக்கிறது. அதனால் ஒரு தகவலை மறந்துவிட்டு இருந்தேன் அதனை இப்பதிவிலேயே பார்த்துவிடலாம். குரு தசா வந்த காலத்தில் இருந்து சிறிய அளவில் தொப்பை வந்துவிடும். எனக்கு வந்தது. உங்களுக்கு வரலாம் வராமலும் இருக்கலாம். இருந்தாலும் சொல்லிவிடலாம் அல்லவா அதனால் சொல்லிவிடுகிறேன்.
நான் அதிகப்பட்சம் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவேன். இரவு கண்விழித்தால் மட்டும் மூன்று வேளை சாப்பிடுவது வழக்கம். இரண்டு வேளை சாப்பிட்டால் கூட சின்ன தொப்பை எனக்கு இருக்கும். அதனாலே சாப்பிட்டை எல்லாம் குறைத்துக்கொண்டு தினமும் அடையாருக்கும் பெசன்ட்நகருக்கும் வாக்கிங் சென்றுக்கொண்டு இருக்கின்றேன்.
நமது உயரமே குறைவு இதில் தொப்பை வந்தால் நன்றாக இருக்காது என்பதால் இப்படி செய்கிறேன். ராகு தசாவில் தொப்பை ஏற்பட்டது இல்லை. குரு தசாவில் தொப்பை வருகிறது. எனது பழக்க வழக்கங்கள் கட்டுபாடு உள்ளதால் அதனை குறைத்துக்கொண்டு வருகிறேன்.
உங்களுக்கும் குரு தசா நடைபெற்றால் உடல் நிலையில் ஜாக்கிரதையாக இருந்துக்கொள்வது நல்லது.தொப்பை வந்துவிடபோகிறது.கொஞ்சம் சாப்பாட்டிலும் கவனத்தோடு இருப்பது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
வணக்கம் !
இந்த பதிவை படித்ததும் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் பள்ளி காலங்களில் மிகவும் ஒல்லியாக இருப்பேன். என் நண்பர்கள் என் அண்ணன் கூட என்னை கிண்டல் செய்வார்கள். ஆனால் ராகு திசை தொடங்கிய 2006 லிருந்து தொப்பை வந்து விட்டது. ராகு திசையும் இப்படி செய்யுமா?
Post a Comment